கோயில்களில் 6 கால பூஜைகள் நேரம்:
நாம் கோவிலுக்கு செல்லும் போது நேரம் பார்க்காமல் சென்று விடுவோம். ஆனால் அங்கு சென்றப்பின் பார்த்தால் சன்னிதானம் நடைச் சாத்தியிருக்கும். நாம் காத்திருக்க வேண்டியிருக்கும். எனவே எப்போது நடை திறந்திருக்கும், சன்னிதானத்தில் தெய்வத்திற்கு பூஜைகள் செய்யும் நேரம் எப்போது என்றுப் பார்த்து சென்றால் சிறந்தது. ஒரு நாளில் ஆறு கால பூஜைகள் நடைபெறும் எந்த நேரத்தில் அந்த பூஜைகள் நடைபெறும் என்று தெரிந்துக்கொண்டு நாம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம் ........
ஆறு கால பூஜைகள் நடைபெறும் நேரம்:
1.உஷக்கால பூஜை-கலையில் ஆறுமணிக்கு....
2.காலசந்தி பூஜை -காலையில் பத்து மணி முப்பது நிமிடத்திற்கு .....
3.உச்சிக்கால பூஜை -மதியம் பன்னிரெண்டு மணிக்கு ...
4.சாயங்கால பூஜை -மாலையில் ஐந்து மணிக்கு .....
5.இரண்டாங்கால பூஜை -இரவு எட்டுமணிக்கு ....
6.அர்த்தஜாம பூஜை -இரவு ஒன்பதுமணிக்கு ....
குறிப்பிட்ட நேரத்திற்கு அரைமணிநேரம் முன்பாகவே நாம் சன்னிதானம் சென்றுவிட்டால் சிறப்பான தரிசனம் கிடைக்கும்.
Leave a Comment