ஆடி மாதத்தில் ஏன் வேப்பிலை, எலுமிச்சை, கூழ் பயன்படுத்தப்படுகிறது?
ஆடி மாதத்தில், மற்ற மாதங்களை விட அதிக பிராண வாயுவின் சக்தி வழக்கத்தை விட கூடுதலாகவே இருக்கும் என்பதால் அம்மனுக்கு உகந்த வேப்பிலை, எலுமிச்சம்பழம், கூழ் ஆகியவை அனைத்து அம்மன் கோயில் இறைவிக்கு அர்ப்பணிக்கப்படுகின்றது.
ஆடி மாதமும் அறிவியலும்
இவற்றை பயன்படுத்துவதால், அறிவியல் ரீதியான காரணமும் உண்டு. ஆடி மாதத்தில் உஷ்ணம் கூடி இருக்கும். அம்மனுக்கு படைத்த ஆடிக்கூழை நாம் சாப்பிடும் போது, அது நம் உடலின் உஷ்ணத்தைக் குறைத்து, உடலை சமச்சீரான வெப்பநிலையில் வைக்கும்.அதே போல எலுமிச்சையானது ஆன்டி ஆக்ஸிடண்ட் சக்தி உண்டு. அதனால் எலுமிச்சை அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
வேப்பிலையின் மருத்துவக் குணம், நோய் எதிர்ப்பு சக்தி தரும் அற்புதம் குறித்து நாம் அனைவரும் அறிந்ததே. மேலும் இது தீய சக்திகள், எதிர்மறை எண்ணங்களை நீக்குவதோடு, நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தியும், மருத்துவ குணமும் கொண்டது.
பெண்கள் ஆடி மாதத்தில் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு ஆகிய நாட்களில் விரதம் இருந்து, வேப்பிலை ஆடை தரித்து, அலகு குத்தி, பூ மிதி (தீ மிதி) விழாவில் பங்கேற்று தங்களின் கோரிக்கையை அம்மனிடம் வைக்கிறார்கள். அப்படி அலகு குத்தும் போதும், பூ மிதிக்கும் போது வலியோ, நெருப்பின் உஷ்ணமோ தெரியாமல் அம்பாள் காத்தருளுகிறார்.
Leave a Comment