திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட்நியூஸ்.... மீண்டும் இலவச தரிசன டோக்கன்
இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு மீண்டும் திருப்பதியில் டோக்கன்கள் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருமலையில் உள்ள அண்ணமய்யா. பவன் கூட்ட அரங்கில் இன்று டயல் ஈ.ஓ என்ற பெயரிலான தொலைபேசி வாயிலாக பக்தர்கள் தேவஸ்தான நிர்வாக அதிகாரியை தொடர்பு கொண்டு தேவஸ்தான நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்ச்சி நடைபெற்றது.
பின்னர் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே விரைவில் திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்களை விரைவில் மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் 123 கோடியே 74 லட்ச ரூபாயை உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்ததாகவும், ஜூன் மாதத்தில் 23 லட்சத்து 23 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும் கூறினார்.
ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட அங்கபிரதட்சனம் டோக்கன்கள் தவிர மீதி இருக்கும் அங்கபிரதட்சனம் டோக்கன்கள் திருப்பதி மலையில் உள்ள கவுண்டர் மூலம் பக்தர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என்று அப்போது கூறினார்.
Leave a Comment