வீட்டில் எதிர்மறை ஆற்றலை நீக்கும் வெட்டிவேர்....
வெட்டிவேரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைத்து அதன் பின்பு, அந்த தண்ணீரை வீட்டின் மூலை முடுக்குகளில் தெளித்து விட்டாலும், எதிர்மறை ஆற்றல் நீங்கும். இப்படியாக வெட்டிவேரை சரியான முறையில் பயன்படுத்தும் பட்சத்தில், உங்களது வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
கெட்ட சக்திகளை விரட்ட கூடிய இந்த வெட்டி வேருக்கு,எந்த ஒரு மந்திரத்தையும் கிரஹித்துக் கொண்டு, அதன் உருவை தனக்குள் வாங்கிக் கொள்ளும் சக்தி அதிகமாகவே உள்ளது. வெட்டிவேரை உங்கள் கைகளில் வைத்துக்கொண்டு, இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு, அதன் பின், அந்த வெட்டிவேரை மஞ்சள் துணியால் கட்டி உங்கள் நில வாசப்படியில் தொங்க வைத்தீர்கள் என்றால், வீட்டிற்குள் இருக்கும் தீவினைகளும் வெளியே ஓடிவிடும். வெளியிலிருந்து ஒரு சிறு கெட்ட தூசி துரும்பு கூட, உங்கள் வீட்டிற்குள் வர முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல், அதிகப்படியான மன பயம் உள்ளவர்கள், மந்திரத்தை உருவேற்றிய இந்த வெட்டிவேரிலிருந்து, ஒரு சிறிய குச்சியை உங்கள் கைகளிலேயே வைத்துக் கொள்ளலாம். அதாவது சின்ன வெட்டிவேர் குச்சியை உங்கள் பர்ஸிலோ, பாக்கெட்டிலோ வைத்துக் கொண்டால் மன தைரியம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரவு நேரங்களில், தூக்கம் இல்லாதவர்கள், தேவையில்லாத கெட்ட கனவு வந்து தொந்தரவு கொடுக்கும் பட்சத்தில், இந்த வெட்டிவேரை தலையணைக்கு அடியில் வைத்து படுத்து கொள்வது நல்ல பலனைத் தரும்.
சிலபேருக்கெல்லாம், வீதியில் இருக்கும் திருஷ்டி கழிவுகளை தாண்டினால் கூட, காய்ச்சல் வந்துவிடும். உடல்நிலை மனநிலை சரியில்லாமல் போய்விடும்.
அடுத்தவர்களின் திருஷ்டி, அடுத்தவர்களின் கழிப்பு, சட்டென்று தாக்கக்கூடிய தேகம் எத்தனையோ பேருக்கு உள்ளது. மன உறுதி இல்லாதவர்களுக்கு, இப்படிப்பட்ட பிரச்சனை அடிக்கடி ஏற்படும். அந்த தொந்தரவு உள்ளவர்களும் இந்த மந்திரத்தை உச்சரித்து, இந்த வெட்டிவேரிலிருந்து, ஒரு குச்சியை கைகளில் வைத்துக் கொண்டால், அதுவும் ஒரு பாதுகாப்பு தான். கூடவே வேப்ப இலைகளையும் வைத்துக் கொண்டால், எந்த ஒரு தீவினைகள் நம்மை தாக்காது என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்த வெட்டிவேரை உருவேற்ற கூடிய அந்த மந்திரம் எது தெரியுமா?
உங்களுக்கான அந்த மந்திரம் இதோ!
‘ஓம் ஆம் வம்
இம் இம் ஓம்’
வெட்டிவேரை உங்கள் கைகளில் வைத்துக்கொண்டு, இந்த மந்திரத்தை108 முறை உச்சரிக்க வேண்டும்.
அந்தக் காலத்திலேயே சித்தர்கள் இந்த மந்திரத்தை, வெட்டிவேருக்கு உருவேற்றி, கெட்ட சக்திகள் தாக்காமல் இருக்க பயன்படுத்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
எந்த ஒரு துன்பமும் நம்மை அண்டாமல் இருக்க வேண்டும் என்றால், வெற்றி நம் வசம் இருக்க வேண்டும் என்றால், இந்த பரிகாரத்தை தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம் .
Leave a Comment