சத்ரு தொல்லை, கடன் தொல்லை நீக்கும் அகஸ்தியர் அருளிய அறுங்கோண சடாட்சர விளக்கு வழிபாடு


சத்ரு தொல்லை-கடன் தொல்லை நீக்கும் அகஸ்தியர் அருளிய முருகனின் அபூர்வ ஆறெழுத்து மந்திரப் பிரயோக அறுங்கோண சடாட்சர விளக்கு வழிபாடு.

முருகனை வழிபட  சடாட்சரம் என்ற அறுகோணச் சக்கரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த அறுகோணச்சக்கரத்தில் சமஅளவுள்ள இரண்டு சம பக்க முக்கோணங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக நேர்எதிர்திசையில் படியுமாறு அமைக்கப்பட்டிருக்கும்.

இரண்டு முக்கோணங்களுக்கு நடுவில் உயிர்சக்தியாக அமைந்துள்ள புள்ளி கந்தன் எனக் கொள்ளப்படுகிறது. இதைச் சுற்றியுள்ள தனிவட்ட வளையங்களில்- உள்வட்டத்தில் ஆறு தாமரை இதழ்களும், வெளி வட்டத்தில் பன்னிரண்டு தாமரை இதழ்களும் வரையப் பட்டிருக்கும். அவற்றைச் சுற்றி பூபுரம் எனப் படும் மூன்று சம இடைவெளியுடன்- நான்கு பக்கங்களிலும் மூன்று சதுரங்கள் வரையப் பட்டிருக்கும்.

பூபுரம் என்ற வெளிச்சுற்று சதுரச் சுவர்களிலிருந்து தொடங்கி, படிப்படியாக உள்ளடங்கி மனதைக் கட்டுப்படுத்தி, மைய ஈர்ப்புப் புள்ளி யுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் மனப்பக்குவம் ஏற்பட்டுவிட்டால், தாம் விரும்புவது எளிதில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

உங்களது வீட்டில் முருகனுக்குரிய சடாட்சரம் என்னும் அறுங்கோண யந்திரத்தை தான்றிக்காய் மரத்தில் இரண்டு சம பக்க முக்கோணங்களை ஒன்றின் மேல் ஒன்றாக நேர் எதிர்திசையில் படியுமாறு அமைத்து அந்த இரண்டு முக்கோணங்களுக்கு நடுவில்  உயிர்சக்தியாக கருதப்படும் கந்தன் எனக் கொள்ளப்படுகிற  புள்ளியின் நடுவில் தீபம் ஏற்றி கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி வழிபட்டு வர  எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள்,கடன் தொல்லை ஆகியவை நீங்கும்.

சகல ஜன வசீகரமாம் *சஹாரத்தாலே*
தனமுதல் அழைத்து வரும் *ரஹாரத்தாலே*
பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் *ஹகாரத்தாலே*
பகைத்தவரைக் கொல்ல வைக்கும் *ணகாரத்தாலே*
சகலமுமே மோஹிக்கும் *பகாரத்தாலே*
சகலரையும் ஸ்தம்பிக்கும் *வகாரத்தாலே*
அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை
ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே.

மேற்கண்ட மந்திரம் அகஸ்தியர் அருளியது.எந்த ஒரு காரியத்திற்காக கிளம்பும் முன் இந்த மந்திரத்தை ஜெபித்து திருநீறு அணிந்து செல்ல காரிய வெற்றி உண்டாகும்.
 



Leave a Comment