சனிக்கிழமைகளில் அரச மரத்தடியில் வாசம் செய்யும் ஸ்ரீலட்சுமி...
"ஆயுர்விருத்தி பகவத் தஸ்யவர்த்தந தேஸர்வ ஸம்பத்'
என்று பத்ம புராணம்சொல்கிறது.
அரச மரத்தைப் பார்த்ததும் வணங்கியவருக்கு ஆயுள் வளரும்; செல்வவளம் பெருகும். கோவில்களில் உள்ள அரச மரத்திற்கு இன்னும் அதிகமான சக்திஉண்டு. இந்த அரச மரத்தடியில் விநாயகப் பெருமான் எழுந்தருளியிருப்பார்.
அத்துடன் நாகர் சிலைகளும் அங்கு இருக்கும்.இதனால் இது தோஷ நிவர்த்திமரமாகவும் கருதப்படுகிறது. அரச மரத்தை காலை வேளையில் ஏழு மணிக்குமுன் வலம் வருவது சிறப்பிக்கப்படுகிறது.
சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் மரத்தைத் தொடக்கூடாது. சனிக்கிழமையன்று அரச மரத்தடியில் ஸ்ரீலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அரச மரத்தைச் சுற்றும்போது கீழ்க்கண்ட சுலோகத்தைச் சொல்லிக்கொண்டே வலம் வந்தால் கூடுதல் பலன் கிட்டும்.
"மூலதோ.
ப்ரும்மரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத் சிவரூபாய
வ்ருக்ஷ ராஜாயதே நம!'
இமமரத்திக் அருகில் எந்த ஒரு கோவில் இருந்தாலும், அந்தக் கோவிலில்மனஅமைதி இருக்கும். மனஅமைதி கொடுப்ப திலும் ரத்த ஓட்டத்தைச்சீர் செய்வதிலும் அரசமரம் முதன்மையான இடத்தை வகிக்கிறது.
புத்தருக்கு ஞானம்பிறந்தது அரசமரத்தடியில் என்று வரலாறு சொல்லும்.விஞ்ஞான ஆய்வின்படி ஒரு அரசமரம் நாளொன்றுக்கு ஆயிரத்து எண்ணூறு கிலோகரியமில வாயுவை உட்கொண்டு, இரண்டா யிரத்து நானூறு கிலோ பிராண வாயுவைவெளியிடுகிறது. அரசமர சமித்துகளை மந்திரப் பூர்வமாக ஹோமத் தீயிலிட்டு,அந்த ஹோமப் புகை வீட்டில் பரவினால் கண்களுக்குத் தெரியாத பூச்சிகள்,கிருமிகள் அழிந்துவிடும்.
விரதம் மேற்கொண்டு, அரசமரத்திற்கு சூரிய உதயத்திற்குமுன்பூஜை செய்து நூற்றியெட்டு முறை வலம் வந்தால், குழந்தைச் செல்வம் உள்ளிட்டபல பாக்கியங்களையும் பெற்று நீடுழி வாழ்வர்.
அமாசோம வாரம் போற்றப்படுவதுபோல, பௌர்ணமியும் போற்றப்படுகிறது. திங்கட்கிழமையில் வரும் பௌர்ணமி அன்று அரச மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகப்பெருமானை யும் நாக தேவதைகளையும் ஆயிரத்தோரு முறை சுற்றி வந்தால். ஆரோக்கியமான வாழ்வு கிட்டும்நூற்றியொரு முறை வலம் வந்தால்.
கன்னியர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் நல்ல இடத்தில் திருமணம்நடை பெறும். சுமங்கலிகளுக்கு சுமங்கலி பாக்கியம் நீடித்து நிற்கும். ஒன்பது முறை வலம் வந்தால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம்.
Leave a Comment