தீர்க்க சுமங்கலியாக வாழ திங்கட்கிழமை அமாவாசை


திங்கட்கிழமையில் வரும் அமாவாசை அன்று சூரியன் முழுமையாக உதிக்கும் முன்பு அரசமரத்தை ஸ்ரீமத் நாராயணனாக பாவித்து வழிபட்டு 108 முறை வலம் வரும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம்.

சோம’ என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், தன் நோய் குணமாக வேண்டி ஈசனை நினைத்து தவம் இருந்தான். சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், அவனது நோயை நீக்கியதுடன், நவக்கிரகங் களில் ஒருவராக திகழும் வாய்ப்பையும் வழங்கினார். அந்த நாள் சோமவாரம் ஆகும். அப்போது சந்திரன், ‘தனது வாரத்தில், மக்கள் விரதம் இருந்து வழிபட்டால் தாங்கள் நல்ல பலனை வழங்க வேண்டும்’ என்று பரமேஸ்வரனை வேண்டிக்கொண்டான். அதன்படி தோன்றியதே சோமவார விரதமாகும். 

அமாவாசையில் வரும் திங்கட்கிழமை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது அமாவாசை சோமவாரம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் என்பது ஐதீகம். மழலைச்செல்வம் கேட்க அரசமரவழிபாடு போல் வேறு எதுவும் இல்லை

அரசமர நிழல் படுகின்ற நீர்நிலைகளில் வியாழக்கிழமை அன்றும் அமாவாசை அன்றும் நீராடுவது திரிவேணிசங்கமத்தில் நீராடுவதற்குச் சமம்.
 



Leave a Comment