கடன், நோய், சத்ரு உபாதைகள் தீர ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வேண்டி ஹோமங்கள்
கடன், நோய், சத்ரு உபாதைகள் தீர்த்து, பயங்களை நீக்கி காத்து அருளும் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வேண்டி லட்ச ஜபத்துடன் தச சஹஸ்ர மஹா யாகத்துடன் அல்லல் போக்கும் ஐந்து ஹோமங்கள்.
வருகிற 14-5-2022 சனிக்கிழமை மற்றும் 15-5-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று விஷ்ணுபதி புண்ய காலம், பௌர்ணமி சுவாதி நட்சத்திரம் கூடிய தினத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி காலை, மாலை இருவேளையும் உலக மக்கள் நலம் பெறவும், நோய்கள், கடன்கள், சத்ரு உபாதைகள் மற்றும் பயங்கள் நீங்க லட்ச ஜபத்துடன் தச சஹஸ்ர ஸ்ரீ லஷ்மி நரசிம்ம மஹா யாகம் நடைபெற உள்ளது.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
குடும்ப நலனுக்காகவும் உலக நன்மைக்காகவும் நடத்தப்படுபவை யாகங்கள், வேள்விகள் எனப்படும் ஹோமங்கள் ஆகும். இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரிஷிகளால் உருவாக்கப்பட்டு, சிறப்புடன் நடத்தப்பட்டு, இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நம் பாரத தேசத்தில் பல்வேறு ஹோம பூஜைகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்களால் பல்வேறு யாகங்கள் செய்ததை அறிய முடிகிறது.
யாகத்தின் மூலம் குறிப்பிட்ட தெய்வங்களை மகிழ்வித்து வேண்டுவோர். வேண்டும் பலனை அடையலாம் என்பது வேத காலம் தொட்டு நிலவி வரும் நம்பிக்கையாகும். பலநூறு வகையான யாகங்கள் இன்று வரையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மிகவும் சிறப்பு வாய்ந்ததும் கலியுகத்திற்கு தேவையான ஒரு ஹோமம் தான் காக்கும் கடவுளான ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் ஹோமம் ஆகும். ஸ்ரீ மகாலட்சுமியின் அருள் கடாட்சத்துடன் நடைபெறும் இந்த ஹோமத்தின் மூலம் கடன், நோய், சத்ரு உபாதைகள் நீங்கி செல்வ வளத்துடன் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெற்று மக்கள் சிறப்புடன் வாழ ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வேண்டி லட்ச ஜப தச சஹஸ்ர மஹா யாகத்தை மேற்கண்ட இரண்டு தினங்கள் 10க்கு மேற்பட்ட ஆச்சார்யர்களைக் கொண்டு நடத்த உள்ளார்.
ஷண்மத ஸ்தாபனம்
வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் சைவம், வைணவம், சாக்தம், சௌரவம், கௌமாரம் மற்றும் காணாபத்யம் என ஆறு மதங்களுக்குரிய கடவுள்களையும், மத குருமார்களையும், 468 சித்தர்களையும், பிரதிஷ்டை செய்யப்பட்டு விஷேச ஹோமங்களும், பூஜைகளும் அன்றாடம் ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நடைபெற்று ஷண்மத ஸ்தாபனமாக திகழ்ந்து வருகிறது.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அனந்தலை பஞ்சாயத்து உட்பட்ட கீழ்புதுப்பேட்டை கிராமத்தில் வாலாஜா சோளிங்கர் செல்லும் சாலையில் மனப்பிணி, உடற்பிணி தீர்க்கும் ஆரோக்ய பீடமாகவும், சர்வ ஐஸ்வர்யத்தை அள்ளித் தரும் குபேர புரியாகவும், சத்ருக்களை ஒழிக்கும் சம்ஹார பீடமாகவும் திகழ்ந்து வருகிறது.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 88க்கு மேற்பட்ட தெய்வங்களின் சந்நிதிகளும், 468 சிவலிங்க ரூபமாக சித்தர்களும், 21 அடி உயரமுள்ள அஷ்ட நாக விஸ்வரூப கல்கருடரும், லஷ்மி, சரஸ்வதி, பார்வதி என முப்பெரும் தேவியாக அருள்புரியும், ஸ்ரீ ராஜமாதங்கியும் 9 அடி உயரத்தில் 18 திருக்கரங்களுடன் யக்ஞஸ்வரூபிணி ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவியும், 9 அடி உயரத்தில் மரண பயம் போக்கும மகிஷாசுரமர்த்தினியும், தங்க சனீஸ்வரரும், சஞ்சீவீ ஆஞ்சநேயரம், 27 நட்சத்திரங்கள் 12 ராசிகளுக்குரிய விருட்சங்களுடைய காலச்சக்கரமும் அருள்புரியும் இப்பீடத்தில் உலகில் இல்லாத மூர்த்தங்களே இல்லை எனலாம். மேலும் 24 மணி நேரமும் செயல்படும் அணையா ஹோமகுண்டம் இங்கு அமைந்துள்ளது மிகவும் சிறப்பு இவற்றுடன் காக்கும் கடவுளும், நோய் தீர்க்கும் மருத்துவ கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு தனிக்கோவில் அமைந்துள்ளது என்பது தான் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இவை மட்டுமின்றி அன்னதானம் கூடம், தியான மண்டபம், கோசாலை, ஆராய்ச்சி மையம், மஹா அவதார பாபா மண்டபம், குரு பீடம் என பல்வேறு சிறப்புமிக்க அம்சங்களுடன் உலகில் எங்கும் இல்லாதவாறு 4 அடி உயரத்தில் நாகக்குடையுடன் இரண்டு விதமான ரகங்களில் ஸ்ரீ கூர்ம பீடத்தில் லஷ்மி நரசிம்மருக்கு ஒரு தனி சன்னதி அமைந்துள்ளது. இப்பெருமாளின் அருள் வேண்டி ஸ்வாதி நட்சத்திர நாளில் நோய்கள் நீங்கவும், கடன்கள் தீரவும், சத்ரு பயங்கள் விலகவும், துஷ்ட சக்திகள் அகலவும் லட்ச ஜப ஸ்ரீ லஷ்மி நரசிம்ம மஹா ஹோமம், சுதர்சன மஹா யாகம், ஸ்ரீ அனுமந் ஹோமம், ஸ்ரீ லஷ்மி வராஹர் ஹோமம் வருகிற 14-5.-2022, 15-5-2022 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று விஷ்ணுபதி புண்ய காலம், பௌர்ணமி ஸ்வாதி நட்சத்திரம் கூடிய சிறப்புமிக்க நாட்களில் காலை, மாலை இருவேளையும் அல்லல் போக்கும் ஐந்து ஹோமங்களாக நடைபெற உள்ளது. தொடர்ந்த நவக்கலச திருமஞ்சனம கூர்ம லஷ்மி நரசிம்மருக்கு நடைபெற உள்ளது.
மேற்கண்ட யாகத்தில் பல்வேறு வகையான சமித்துக்கள், மலர்கள், 200க்கும் மேற்பட்ட மூலிகைகள், பட்டு பீதாம்பரங்கள், பசுநெய், தேன், சௌபாக்ய பொருட்கள் கொண்டு நடைபெறும் இந்த ஹோமத்தின் மூலம் குடும்பத்தில் மன சந்தோஷம், மன நிம்மதி கூடும். மேலும் தீராத நோய்கள் தீரும், பயங்கள் அகலும், கடன் தொல்லைகள், சத்ரு உபாதைகள் நீங்கும், விவசாயம், வியாபார-தொழில் அபிவிருத்தி பெறலாம், வழக்குகளில் வெற்றி, பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருதல், தம்பதிகள் ஒற்றுமை, ஆண், பெண் திருமணத் தடை நீங்கும், மகப்பேறு, சௌபாக்கிய வாழ்வு, அதிகாரம், பதவி உயர்வு, சொந்த வீடு, வேலை வாய்ப்பு, உறவு சமூகம், செல்வாக்கு, சொல்வாக்கு, வெளிநாட்டு யோகம் என சகல நன்மைகளும் உண்டாகும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Leave a Comment