அட்சய திருதியை பூஜை நேரம்‌ குறித்த தகவல்கள்...


அட்சய திருதியை என்றால்‌ வளர்க என்று பொருள்‌. அட்சய திருதியை நாளில்‌ செய்யும்‌ செயல்‌ மேன்மேலும்‌ வளரும்‌ என்பது நம்பிக்கை. அட்சய திருதியை நாளில்‌ நாம்‌ வாங்கும்‌ பொருட்கள்‌ மேன்மேலும்‌ வளரும்‌. அன்றைய தினம்‌ கல்‌ உப்பு. மஞ்சள்‌ வாங்கினாலும்‌ தங்கம்‌ வாங்குவதற்குரிய பலன்கள்‌ இடைக்கும்‌. நம்முடைய வீட்டில்‌ செல்வம்‌ பெருகும்‌. சுக்கிரன்‌ ஆசி நிறைந்த வெள்ளிக்கிழமை அட்சய திருதியை வருவது சிறப்பானதாகும்‌.

பிரம்மன் தனது சிருஷ்டித் தொழிலைத் தொடங்கியது இந்த நாளில்தான். பிரளயம் முடிந்து, வெள்ளத்தில் மிதந்து வந்த கும்பத்தை உடைத்து, சிருஷ்டி மீண்டும் துவங்க சிவ பெருமான் அருளிய தினம். திருமகள் திருமாலின் இதயத்தில் குடிகொண்ட தினம். அதனால்தான், இன்றைய தினத்தில் லட்சுமி தேவியை மட்டும் வணங்காமல் பெருமாளையும் சேர்த்து வணங்க வேண்டும் என்பர்.

வனவாசம் சென்ற பஞ்ச பாண்டவர்கள் தவம் இருந்து சூரிய பகவானிடம் அட்சய பாத்திரம் பெற்ற தினம். பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரன், லட்சுமி தேவியை வணங்கி, செல்வத்தைப் பெற்ற தினம். இன்றைய தினத்தில் லட்சுமி பூஜை, குபேர பூஜையை செய்ய ஐஸ்வர்யம் பெருகும். இயலாதவர்கள், "ஓம் ஐஸ்வரேஸ்வராய நம:" என்று கூறினாலே போதும் என்கிறார் திருமூலர்.

பாற்கடலைக் கடைந்தபோது ரத்தினங்கள், ஐராவதம், கல்பதரு, காமதேனு, சந்திரன், மகாலட்சுமி ஆகியோர் தோன்றினர். இப்படி அலைமகள் அவதரித்த தினம் அட்சயதிரிதியை. பிட்சாடனரான ஈஸ்வரன், ஸ்ரீஅன்னபூரணியிடம் பிட்சை பெற்றது இந்த நாளில்தான். கௌரவ சபையில் திரௌபதியின் மானம் காக்க ஸ்ரீகிருஷ்ணர் துகில் தந்து அருளியது போன்ற புராணச் சம்பவங்கள் நிகழ்ந்ததும் இந்தத் தினத்தில்தான். பரசுராமர் அவதரித்ததும் அட்சய திரிதியையில்தான். இந்த நாளில் பரசுராமர் வழிபாடு நன்மை தரும்.

சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு 3-வது நாள்‌ அட்சய திருதியை 3-ஆம்‌ எண்ணுக்கு அதிபதி குரு. இந்த குரு உலோகத்தில்‌ தங்கத்தை பிரதிபலிக்கிறார்‌. எனவே குருவுக்கு பொன்னன்‌ என்ற பெயரும்‌ உண்டு. இதனால்‌ தான்‌ அட்சய திருதியை நாளில்‌ பொன்‌ வாங்குவது சிறப்பாகிறது.

அட்சய திருதியை 2022 தேதி

 அட்சய திருதியை 2022 தேதி    03.05.2022

அட்சய திருதியை 2022 நேரம்     காலை 05:48 - மாலை 12 : 06
 



Leave a Comment