சனி தசை எப்போது யோகத்தை கொடுக்கும்...


சனி மகாதசை. ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் சனி தசையில் 19 ஆண்டுகளாக கழிக்கிறார். சனி தன்னுடைய ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருவதற்கு முப்பது ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார். இயல்பிலேயே மிகவும் மந்தமான நிதானமான கிரகம்.

சனி தசை ஒருவருக்கு வந்துவிட்டால் ஒருவருக்கு மிகுந்த தன சேர்க்கை பொருள் சேர்க்கை யோகம் இவை அனைத்தும் கொடுத்துவிடுவாரா?என்றால் நிச்சயமாக அவ்வளவு எளிதாக கொடுத்து விடமாட்டார்.என்றே சொல்ல வேண்டும். சனி தசையில் ஒருவருக்கு கொடுக்கக்கூடிய அனுபவங்கள் யாவும் விதைகள் ஆகவே கருதப்படவேண்டும், மனித வாழ்வை செம்மைப் படுத்தவே அவர். பொதுவாக சனி தசை காலத்தில் ஒருவர் கர்ம பலனை அனுபவிக்க முடியும். கர்மகாரகன் சனியும், கர்மத்தை கணக்கில் வைத்துக் கொள்பவர் கேது இவர்கள் இருவரின்  தசையும் வாழ்வில் படிப்பினையை கொடுக்கும் .

குரு பார்வையில் உள்ள சனி தசை, பௌர்ணமி சந்திரன் அல்லது வளர்பிறைச் சந்திரன் உடன் இணைந்தோ அல்லது பார்க்கப்பட்ட இருக்கும் தசை, இவை மட்டும் போதுமா யோகத்தை செய்வதற்கு என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூறுவேன் அதனுடன் நம்முடைய கரும பலனும் இணைந்தே அவருடைய பலன் இருக்கும். சனி தசை கடப்பதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் நிச்சயமாக வாழ்வில் படிப்பினையை கொடுப்பார்.

துலா லக்னம் : சனி தசையில் மிகுந்த யோகத்தை அனுபவிப்பவர்கள் முதன்மையான லக்னம். காதல் திருமணம் போன்ற விஷயங்களையும் சுகஸ்தான அதிபதியாகவும் பஞ்சமாதிபதி ஆகும் வருவதால் நிச்சயமாக யோகத்தை செய்வார் .உடன் குரு பார்த்து சனியாகவோ அல்லது நட்பு வலுவிலோ இருந்தால் மேலும் சிறப்பு .

மகர லக்னம் :தன வாக்கு குடும்ப ஸ்தானாதிபதியாக, லக்னாதிபதியாக வருவதால் ,நிச்சயமாக கெடுக்க மாட்டார் அதேசமயத்தில் கடின உழைப்பை கற்றுக் கொடுத்து அதன்பின் பலனை அனுபவிக்க செய்வார். கடின உழைப்பிற்குப் பிறகு யோக பலனை அனுபவிக்க இயலும், சிறுவயதிலேயே வரக்கூடிய சனிதசை கர்ம பலனையே செய்யும்.

கும்ப லக்னம் :தன்னுடைய சொந்த வீடாக இருந்தாலும் கூட விரையாதிபதி ஆகவும் செயல்படுவார்.  சுப விரயங்கள் ஆக வெளிநாடு வாழ்க்கை யோகங்கள் மூலமாகவும், வீடு கட்டுதல் வாங்குதல் போன்றவற்றின் மூலமாகவும் வளம்பெற செய்வார் ..இவர்களுக்கும் பெரும்பாலும் தீமைகள் எதுவும் நடைபெறுவதில்லை. குரு பார்வையில் இருந்தால் மேலும் சிறப்பு.

ரிஷப லக்னம் :முழு யோக ராக செயல்படுவார் 9 10 ஆதிபத்தியம் பெறுவதால், திருமணம் போன்ற சுப காரியங்களை ஏற்படுத்திக் கொடுப்பார் மனதிற்கு விரும்பியவரை திருமணம் முடிக்க செய்வார், யோக ராகவே இருந்தாலும் கடினமாக  உழைத்தால்தான் பலனைக் கொடுப்பார், யோகர் ஆக இருக்கும் ரிஷபத்திற்கு சிலசமயங்களில் கெடுபலன்களை சனி திசையில் நடக்கும் பொழுது, அவை நிச்சயமாக நம்முடைய வாங்கிவந்த கர்மா பலனாகத்தான் இருக்கும்.

மிதுன லக்னம், கன்னி லக்னம் : மிதுன கன்னி லக்னத்தைப் பொருத்தவரை மத்திம பலனை செய்வார். பெரிய யோகத்தை எதிர்பார்க்க இயலாது. முக்கியமாக இந்த லக்னகாரர்களுக்கு, கடன் வாங்காமல் இருக்க வேண்டும் சனி தசையில், பகை போன்றவற்றால் மட்டுமே தீங்கு நேரிடும் அதேசமயத்தில், மிதுனத்திற்கு 8,9 ஆக வரும்பொழுது அஷ்டமாதிபதி  பலன்களை செய்யும்பொழுது அது முழுக்க முழுக்க கரும பலனை நாம் அனுபவிக்க நேரிடும், இந்த இடத்தில் குரு பார்த்த சனியாகவோ அல்லது  நட்பு வலுப்பெற்று   இருக்கும் பொழுது, கோச்சார பலன்களைப் பொறுத்து, தசா வேலை செய்யும். .

மேஷ, விருச்சிக லக்னம் : சனி திசையில் மிகுந்த பாதிப்பை அனுபவிப்பவர்கள் இவர்கள்தான்,, லக்னாதிபதி சனிக்கு பகையாக இருப்பதால், மேலும் மேஷ ராசிக்காரர்கள் ஏழரை சனி அஷ்டம சனி காலங்களில் மிகுந்த பாதிப்பை அடைகிறார்கள்,  இந்த லக்னக்காரர்கள் பொருத்த வரை சனி தசை சுபர் தொடர்பு மற்றும் நட்பு வலுப்பெறும் பொழுதும் சற்று குறைவாக கெடு பலன்கள் நடைபெறும்.

சிம்ம லக்னம் :இந்த லக்னத்தை பொருத்தவரை குரு பார்த்த சனியாகவோ அல்லது குருவின் சாரம் பெற்று நட்பு வலுவுடன் உபஜெய ஸ்தானம் ,இவைகளில் இருக்கும் பொழுது மட்டும் தான் சனி தசை கெடு பலன்களை குறைத்து செய்யும்.

கடக லக்னம் :7,8 என இரண்டு ஆதிபத்தியம் பெறுவதால் களத்திர ஸ்தானாதிபதியாக வருவதால், மத்திம பலன்களை தருவார், கடக லக்னத்தை பொருத்தவரை, அஷ்டமாதிபதி செய்யும் பொழுது சற்று கடும் பலன்கள் இருக்கும் 

தனுசு மீன லக்னங்கள் :சமமான பலன் இருக்கும் அதே சமயத்தில் விரயத்தை ஏற்படுத்தி விடுவார். சேமிப்பு என்பது இவருடைய தசா காலத்தில் எட்டாக் கனியாகவே இருக்கும். லக்னாதிபதியுடன் நட்பு வலுவிலோ அல்லது லக்னாதிபதி பார்வையில் இருக்கும் பொழுது பெரிதாக இவர்களுக்கு கெடுதல் செய்யாவிட்டாலும் பெரிய நன்மைகள் எதுவும் செய்ய மாட்டார் .

சனிதிசை யோகத்தை செய்ய வேண்டுமென்றால், மொத்தத்தில் குருவினால் மட்டுமே சனியை சுபத்துவ படுத்த முடியும். குரு பார்த்த சனி என்பதால் தீங்கு செய்ய மாட்டாரே தவிர அதேசமயத்தில் நன்மைகள் என்பது அவரவர் கர்ம பலன்களை பொறுத்தே அமையும். 



Leave a Comment