சிந்தனானந்த யோகம் தரும் வாராஹி மந்திரம்


புகழ்சொற்பாமாலை (மௌனானந்த யோகம்)

ஊரா கிலும்உடன் நாடா கிலும்அவர்க் குற்றவரோடு

யாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல்ஆழி உண்டு

காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு

வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉண்டே.


படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)

உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்

வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்

இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்

விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.


பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்)

தஞ்சம் உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்

வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை

நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)

அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.


படைநேமி வாழ்த்து (சிந்தனானந்த யோகம்)

அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்

கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்

தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்

நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே.


அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்)

சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே

அந்தி பகல்உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்

நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்

புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே.
 



Leave a Comment