சபரிமலை நடை திறப்பு... இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை விஷூ பண்டிகைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.இன்று அதிகாலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தினமும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 15-ந் தேதி சித்திரை விஷூ வழிபாடுகள் நடைபெறுகிறது.
கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி கிடைக்கும்.
இதையடுத்து சித்திரை விஷூ திருநாளில் சபரிமலை செல்ல பக்தர்கள் பலரும் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகிறார்கள். மேலும் சபரிமலையில் பல்வேறு பூஜைகள் மற்றும் பிரசாதங்களுக்கு தேவசம் போர்டு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முக்கிய பிரசாதமான அப்பம், அரவண போன்றவற்றை 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
விஷூ திருநாளில் காலை கனிகாணும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று அதிகாலை முதல் சபரிமலை தந்திரி மற்றும் மேல் சாந்தி இருவரும் பக்தர்களுக்கு விஷு கை நீட்டம் வழங்குவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது.
Leave a Comment