சித்திரை வசந்த திருவிழா... தங்க சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர்...


திருச்செந்தூர் சுப்பிமணிய சுவாமி கோவிலில் சித்திரை வசந்த திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார்.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சித்திரை வசந்த திருவிழா இன்று தொடங்கியது. இத்திருவிழா  10 நாட்கள் நடக்கிறது. திருவிழாவின் முதல் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. பின்னர் 6 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. 

பின்னர், கோவிலில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர்  சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் 11 முறை சுற்றி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தொடர்ந்து சுவாமி கிரி வீதி வழியாக கோவிலுக்கு சென்றார். 

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர்(பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.



Leave a Comment