கருட சேவையின் சிறப்பு


மகாவிஷ்ணுவின் முதல் பக்தனாக இருப்பவர் கருட பகவான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. மகாவிஷ்ணு கருடனை தனது வாகனமாக தேர்ந்தெடுத்ததால், பிரம்மோற்சவத்தின் போது மற்ற வாகனங்களைவிட கருட வாகனத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கருடசேவையின் போது தமிழ்நாட்டின் ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து வரும் துளசி மாலை மூலவருக்கு அணிவிக்கப்படும். இந்த மாலையுடன் மூல விக்ரக மூர்த்தி அணிந்து இருக்கும் தங்கச்சங்கலி, மகரகண்டி, லட்சுமிஹரம் போன்ற நகைகளை கருடசேவையின் போது மட்டும் உற்சவமூர்த்தியான மலையப்பசாமிக்கு அணிவித்து அலங்கரிப்பார்கள். இந்த நகைகள் அணிந்து வரும் மலையப்பசாமியை தரிசனம் செய்வது கண்கொள்ளாக் காட்சியாகும். ஏழுமலையானையும், கருடனையும் ஒரு சேர வணங்குவதாக நினைத்து, கருடச்சேவையை காண லட்சக்கணக்கிலான பக்தர்கள் திருமலையில் கூடுவார்கள்.



Leave a Comment