சனி பகவான் பற்றிய முக்கிய தகவல்கள்
சனிபகவான் ஜன்ம லக்னத்தில் இருந்தாரானால் அது சொந்த வீடாக இல்லாத பட்சத்தில் ஜாதகரின் வாழ்க்கையில் சங்கடங்கள் சூழக் கூடும். ஜாதகர் வறுமையில் உழல்வார். மட்டமான செயல்களைச் செய்யக்கூடியவர் ஆவார். மந்தமாகப் பேசுவார்.
லக்னத்தில் சனிபகவான் இருக்கப் பெற்று சனிபகவான் அது பகைவீடாக இருக்குமானால் நண்பருடன் சண்டை போடுகிற குணம் ஜாதகருக்கு அமையும். ஜன்ம லக்னம் துலாமாகவோ, தனுசாகவோ, மீனமாகவோ அமைந்து அதில் சனிபகவான் இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு உயர்வுகள் உண்டு. தோற்றப் பொலிவு இருக்கும். ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கும் தகுதி ஏற்படும்.
மகரம் அல்லது கும்பம் ஜன்ம லக்னமாகி சனிபகவானவர் அங்கே இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு விசேஷமான தகுதிகள் நன்மைகள் சிறப்புகள் எல்லாம் உண்டாகும்.
ரிஷபத்தில் உள்ள சனிபகவனானவர் அது ஜன்ம லக்னமானால் சிறப்பான பலன்களைத் தருவார் என்று சில கிரந்தங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.
2-ஆம் இடத்தில் உள்ள சனிபகவனானவர் நிறையப் பணம் தருவார். ஆனால், அந்தப் பணத்தை இழக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படக்கூடும். 2-ல் உள்ள சனிபகவனால் முகத்தில் நோய் அல்லது வாயில் புண் ஆகியவை உண்டாகக் கூடும்.
சனிபகவானவர் 2-ஆம் இடத்தில் இருந்தாரானால் தாய்நாட்டை விட்டு வெளிநாட்டிற்குச் சென்று சுகபோகங்களையும், செல்வங்களையும் பெறக்கூடியவராக இருப்பார்.
2-ல் உள்ள சனிபகவானால் ஜாதகருக்குத் தாயிடம் பக்தியுண்டாகும். ஆனால், சகோதர பாசம் இராது.
2-ல் உள்ள சனிபகவானுக்குச் சுபபலம் இருக்குமானால் அதாவது ஆட்சி, உச்சம் போன்ற நிலை இருக்குமானால் குறைகள் குறையவும், நிறைகள் அதிகமாகவும் சந்தர்ப்பமுண்டு.
3-ஆம் இடத்தில் உள்ள சனிபகவான் அறிவு, ஆற்றல் இரண்டையும் தருவார். ஆனால், மனோவியாகூலம் அவ்வப்போது உண்டாகும்.
சனிபகவானவர் 3-ல் இருந்தால் ஜாதகருக்குத் தரும குணம் இருக்கும். ஆனாலும் செய்யும் காரியங்களில் தரக்குறைவு இருந்து கொண்டிருக்கும். 3-ல் உள்ள சனிபகவான் பலம் பெற்றிருந்தாரானால் குறைகள் எல்லாம் அகல்வதோடு மனைவியால் இன்பமும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உண்டாகும்.
3-ஆம் இடத்தில் உள்ள சனிபகவான் பலவீனமாக இருந்தாரானால் சகோதரர்களுக்கு நாசம் ஏற்படக்கூடும். தாய்நாட்டை விட்டு வெளிநாடு செல்லக்கூடிய நிலை ஜாதகருக்கு உண்டாக கூடும். அந்த நிலை நல்லதாக அமைவதற்கு 3-ல் உள்ள சனிபகவான் பலம் பெற்றிருக்க வேண்டும்.
Leave a Comment