நாடியவர்களுக்கு நலம் தரும் ஸ்ரீமஹா வாராஹி திருவடி மாலை 


அண்டத்தை படைத்தவள் அகில லோக நாரணி
தண்டத்தை எடுத்தவள் தர்மத்தை காத்தவள் 
பிண்டத்தை பிடித்தவள் பிணி போக்கியவள் 
கண்டத்தில் நின்று பவனி வருபவள் வாராஹி

கருனை வடிவனாவள் கற்பக தருவானவள் வாராஹி
அருள் வடிவாக அபய ரூபிணி அவளே வாராஹி 
தருணம் கண்டு அழைத்ததால் மறுப்பாளோ வாராஹி 
குருவாகி வருபவள் குழந்தை எம்மை காப்பவள் வாராஹி

பைரவ நாயகி சிவ ஞான போதகி பைரவி 
பிறவா நிலை தரும் முக்தி தரும் வாராஹி 
மறவாத வரம் தர வேண்டுமே உன் நினைவிலே 
அரவம் விளையாடும் ஆதிசக்தி வாராஹி

சங்கர ரூபத்தில் சங்கடம் போக்கி சக்தியானவளே 
பங்கஜ ரூபிணி பயங்கர ரூபிணி பார்வதி தேவி 
சங்கு சக்ர தாரிணி சர்வ பக்த பிரிய ரூபிணி 
பொங்கிடும் செல்வமே புண்ணிய வடிமே வாராஹி

ஆதியாகி ஆதியின் பாதியாகி பரம்பொருளே 
சோதியாகி சுந்தர வடிவாகி வந்த வாராஹி 
சதியாகி சர்வ சக்தியாகி பயங்கர ரூபிணி வாராஹி 
திதியாகி திதியும் திருநாளாக வருவாய் எம் வாராஹி

கலப்பை எடுத்து கதிவரன் போல வருபவளே 
உலக்கை எடுத்த உன் மத்த பைரவியே 
சலங்கை ஒலியுடன் சதிராடும் சங்கரியே 
கலங்கதா உள்ளத்தில் இருக்கும் உமையே வாராஹி

 காற்றாகி கருணை ஊற்றாகி வருபவளே  வாராஹி 
போற்றி போற்றி வந்தோமே வாராஹி திருமகளே 
தூற்றுபவர் யாரே தூயவளே உன் பார்வையிலே 
வற்றாத அருள் சுடரே வாராஹி பெருங்கடலே

தேடிய செல்வமே தேவை உன் திருவடி திருவருளே 
ஓடி உனை காண வந்தேன் உமையாவளே பரம்பொருளே 
நாடிய பேரை நலமுடன் காப்பவளே நாயகியே 
துடிய வாராஹி திருமகளே

புண்ணிய ரூபினி பூமி தாயே பாவம் தீர்ப்பவளே 
எண்ணிய பேரை காத்திடும் சுந்தரி கலியுக நாயகி
மண்ணில் உள்ள உயிர்களை ரட்சிக்கும் நாரணியியே
புண்ணிய தேவி புவனம் காத்திடும் சங்கரி வாராஹி தேவி

பஞ்ச பூத ரூபிணி பயங்கரி வாராஹி 
தஞ்சை நகர் உறைகின்ற சங்கரி வாராஹி 
நஞ்சுண்டவன் நாயகி நலம் தரும் தேவி வாராஹி 
தஞ்சம் என்று அடைந்தோம் தேவி வாராஹி

 மாதவனின் தங்கையே மங்கள செல்வி 
ஆதவன் தாயே அருள் புரிவாயே அம்பிகையே  
வாதம் புரிந்திட வந்திட்ட சக்தி வாராஹி திருவருளே 
பாதம் பற்றினோம் வடிவழகே வாராஹி பரதேவி

உக்ர ரூபத்தில் அரக்கனை அழித்தவளே 
சக்ர தேரினிலே பவனி வரும் வாராஹி திருமகளே 
வக்ர பார்வையில் சத்ருவை அழிக்கும் எம் தாயே 
சர்வ சக்தி மஹா வாராஹி திருவழகே.
 



Leave a Comment