சூரியன் அவதரித்த ரதசப்தமியின் சிறப்பு...
ரதசப்தமி தினமே சூரியன் அவதரித்த திருநாளாகும். .பிரளயம் தோன்றி அடங்கிய வேளையில் அடர்ந்த இருளில் பிரம்மதேவர் செய்வதறியாது திகைத்து நிற்கும் பொழுது அந்த சூழலில் ‘ஓம்’ என்னும் பிரணவம் எழுகிறது . அந்த ஓம் எனும் பிரணவ ஒலியில் இருந்து ஒளி பிறக்கிறது .அந்த ஒளியிலிருந்து சூரிய பகவான் அவதரித்தார் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகிறது.
பீஷ்மாஷ்டமி என்பதன் விளக்கம்:
ரதப்தமியில் இன்னொரு சிறப்பு பிதாமகரான பீஷ்மருடன் நெருங்கிய தொடர்பு உடையதாகும். பிதாமகர் நினைக்கும்போது இறக்கும் வரத்தை தந்தையிடம் பெற்றிருந்தார். அம்புப் படுக்கையில் பீஷ்மர் உத்தராயண புண்ணிய காலமான தை மாதத்தில் உயிர் பிரிய வேண்டும் என்று காத்திருந்தார். தை மாத அமாவாசைக்குப்பின் வரும் ஏழாம் நாளே ரதசப்தமி வரும் நாளாகும். (சூரிய பகவான் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்க ஆரம்பப்பதே உத்தராயண புண்ணிய காலம் என்பதாகும்.) தை பிறந்த பின்னும் உயிர் பிரியவில்லையே என்று வருந்தியபோது வியாசர் பகவான் வருகை தந்தார்.
இதற்கான காரணத்தை வியாச பகவானிடம் வினவியபோது , அரசவையில் ‘திரௌபதியை’ துரியோதனன் துகில் உரிந்த வேளையில் திரௌபதி அபயக் குரல் எழுப்பியும் நீங்கள் அதர்மத்தை கண்டுகொள்ளாமல் இருந்த பாவமே இதற்கு காரணம் என்று என்று சொல்லி கையில் இருந்த எருக்க இலைகளை பீஷ்மரின் உடல் முழுவதும் அடுக்கி இந்த ‘அர்க்கபத்ரம்’ என்னும் எருக்க இலைகள் சூரியனின் சக்தி கொண்டவை ஆகும். இவை உங்கள் பாவங்களை போக்கி புனிதப்படுத்தும்.
அதன் பின் நீர்விரும்பியபடி நடக்கும் என்று அருளினார். அதன்படி எருக்கு இலைகள் அவரது பாவத்தை போக்க அவர் விரும்பியபடி ரதசப்தமிக்கு மறுநாள் அஷ்டமியன்று மரணம் உண்டானது. இதுவே ‘பீஷ்மாஷ்டமி‘என்று அழைக்கப்படுகிறது.
Leave a Comment