எப்பேர்பட்ட பகையையும் இல்லாமலாக்கும்  வாராஹி மந்திரம் 


வெற்றி ஈர்ப்பு (சத்ரு ஸம்ஹாரம்)

நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்

கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்

டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும்

தொடும்கார் மனோன்மணி வாராஹிநீலி தொழில் இதுவே.


 உச்சாடணம் (ரோகஹரம்)

வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை

நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்

பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை

நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே.


எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)

நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்

வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்

ஏசப் படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே

வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே.


பெரு வச்யம் (திரிகாலஞானம்)

வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்

காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே

ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி

மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.


பகை முடிப்பு (வித்வேஷணம்)

வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச்

சிரித்துப் புரம்எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்

கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற்

பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே.
 



Leave a Comment