ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் கட்டண சேவைகள் .
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஏழுமலையான் கோவிலில் மீண்டும் கட்டண சேவைகள் துவங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கரோனா காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி ஏழுமலையான் கோவிலில் கட்டண சேவைகள் நிறுத்தப்பட்டன.
இந்தநிலையில் கட்டுப்பாடுகளில் குறிப்பிட்ட அளவிற்கு தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாதம்,தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்ம ஆராதனை, திருப்பாவாடை,வஸ்திர அலங்காரம், அபிஷேகம், கல்யாண உற்சவம், பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய கட்டண சேவைகள் மீண்டும் துவங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் தற்போது ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளில் பக்தர்கள் காணொளி மூலம் கலந்து கொள்கின்றார்.
இந்த நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.காணொளி மூலம் நடைபெறும் கட்டண சேவைகளில் கலந்து கொள்வதற்காக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் 1-ஆம் தேதி முதல் ஏழுமலையான் கோவிலில் நடைபெற இருக்கும் கட்டண சேவைகளில் நேரடியாக கலந்துகொள்ள இயலாது.
ஆனால் அவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். உதய அஸ்தமன சேவை,விம்சாட்டி வர்ஸ்ஸ. தர்ஷினி ஆகிய கட்டண சேவைகளை முன்பதிவு செய்திருக்கும் பக்தர்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கட்டண சேவைகளில் நேரடியாக பங்கு பெறலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Leave a Comment