தேய்பிறை ஷஷ்டியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சத்ரு சம்ஹார ஹோமம்
வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஒவ்வொரு தினமும் தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், ஆரோக்ய லக்ஷ்மி ஹோமம் மற்றும் ஏராளமான சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன.
ஹோமங்கள்:
பொதுவாக ஹோமங்கள் என்பது இழந்த ஒன்றைத் திரும்பப் பெறுவதற்கும், முறையாக வர வேண்டியதை மீண்டும் பெறுவதற்கும் மற்றும் திருமணம், குழந்தைப்பேறு, உத்தியோக வாய்ப்பு, மன மகிழ்ச்சி, குடும்ப க்ஷேமம், குழந்தைகளின் கல்வி, போன்ற பல காரணங்களை முன்னிலைப்படுத்திச் செய்யப்படுகின்றன.
நம்பிக்கை வைக்க வேண்டும்:
எல்லாவற்றுக்கும் மனம் ஒன்ற வேண்டும். மருத்துவரிடம் போனால் அவர் தருகிற மருந்தில் நம்பிக்கை வைக்க வேண்டும். குருவிடம் போனால் அவர் சொல்லித் தருகிற மந்திரத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும். அதுபோல் ஒரு ஹோமம் செய்கிறீர்கள் என்றால், முதலில் நம்பிக்கை வேண்டும். இந்த ஹோமத்தை செய்தால், நிச்சயம் நாம் வேண்டுவது கிடைக்கும் என்கிற உறுதி வேண்டும்.
தன்வந்திரி பீடத்தில் 88 விக்கிரங்கள், 468 சித்தர்கள்:
இந்த பீடத்தில் பிரதிஷ்டை ஆகி இருக்கும் 88 விக்கிரங்கள் அனைத்தும் புன்னகையுடன் இருப்பதைப் பார்த்துப் பலரும் ஆச்சரியாகக் கேட்கிறார்கள். சாந்நித்தியம் மிகுந்துள்ள இந்த பீடத்தில் இல்லாத கடவுளர். திருவுருவங்களே இல்லை எனலாம்.
இழந்ததை தரும் இறைவன் - ஸ்ரீ கார்த்தவீர்யாஜுனர்:
ஸ்ரீ கார்த்தவீர்யாஜுனரை வணங்கி விட்டு, அவருக்கு உண்டான ஹோமத்தை சிரத்தையோடு செய்தால், காணாமல் போன பொருட்கள், இழந்த சொத்துக்கள், கிடைக்காமல் போன நியாயங்கள் மீண்டும் கிடைக்கும். நெடுநாட்களாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்வார்கள். நம்பிக்கையோடு இங்கு வந்து எத்தனையோ அன்பர்கள் அந்த ஹோமம் செய்து பலன் பெற்றிருக்கிறார்கள்.
அந்த வகையில் வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 22.02.2022 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் சத்ரு உபாதைகள் அகலவும் தேய்பிறை ஷஷ்டியை முன்னிட்டு சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெறவுள்ளது.
ஷஷ்டியின் சிறப்பு:
விரதங்களுள் கலியுக வரதனும் கண்கண்ட தெய்வமுமான கந்தனுக்குரிய சிறந்த விரத நாட்கள் மூன்றாகும்.அவை முறையே சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம் ஆகியவையாகும். இவற்றுள் மிகச் சிறந்த விரதம் சஷ்டி விரதமேயாகும். சஷ்டி விரதத்தின் பலன்:
இரத்த சம்பந்தமான நோய்கள் அகலவும், எதிரிகள் விலகவும் குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், குழந்தை பாக்யம் கிடைக்கவும் ,வேலைவாய்ப்பு அமையவும், கடன் தொல்லை நீங்கவும் மேற்கண்ட யாகம் நடைபெறவுள்ளது.
"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த யாகமாகும். மேலும் விரும்பிய பலனைப் பெறலாம்.
கந்த புராணத்தில் முருகப் பெருமானின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம் பெறுபவர்கள் கார்த்திகை பெண்கள். பரணி, கிருத்திகை, ரோகிணி, பூசம், உத்திரம், விசாகம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு. கார்த்திகைப் பெண்களுக்கு வேலூர் மாவட்டம் வாலஜாபேட்டையில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பெற்ற தாய் எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் வளர்ப்புத்தாய் என்று அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்திலும், வளர்ப்புத்தாய்க்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்திலும் முருகப்பெருமானே பார்வதி தேவிக்கு மேலாக கார்த்திகை பெண்களை நேசித்தார் என்ற வகையிலும் உலகில் எங்கும் இல்லாதவாறு ஆறு பெண்களுடன் தாமரை பீடத்தில் முருகருக்கே உரிய மயில், பால்கிண்ணம், சேவல், வேல், சூரியன், சந்திரன் என்ற பொருள்களுடன் மலர்ந்த முகத்துடன் ஞானக்குழந்தையாக 468 சித்தர்களுக்கும் ஞானகுருவாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் புதுமையான முறையில் கார்த்திகை குமரன் விக்ரஹம் பிரதிஷ்டை செய்து சஷ்டி, கிருத்திகை, விசாகம், போன்ற நாட்களில் சிறப்பு ஹோமங்களை செய்து வருகிறார்.
வருகிற 22.02.2022 தேற்பிறை ஷஷ்டியை முன்னிட்டு நடைபெறும் சத்ரு ஸம்ஹார ஹோமத்திலும், தொடர்ந்து நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையிலும், அபிஷேகத்திலும், பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு கார்த்திகை குமரனையும், கார்த்திகை பெண்களையும், 468 சித்தர்களையும் ஒரு சேர தரிசித்து, உடல் மற்றும் மனரீதியான நோய்களிலிருந்தும் சத்ரு உபாதைகளில் இருந்தும் நிவாரணம் பெறவேணுமாய் கேட்டுக்கொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Leave a Comment