ரத சப்தமி அன்று எருக்க இலைகள் வைத்து நீராடுவதன் காரணம்
பீஷ்மர் பிரம்மச்சாரி என்பதால் பிதுர்க்கடன் செய்வது யார் என்று தர்மர் வருந்தினார். அதற்கு வியாசபகவான் ஒழுக்கம் தவறாத உத்தம பிரம்மச்சாரி, துறவி என்பதால் இது தேவையில்லை. ஆனாலும், தங்கள் உடம்பின் மீது எருக்க இலைகளை வைத்து நீராடுவோர் அனைவரும் புண்ணியம் சேர்ப்பார்கள்.அவர்கள் செய்த ஏழேழு ஜென்மங்கள் செய்த பாவங்கள் தீரும் என்று அருளினார்.
ரதசப்தமியன்று நீராடும் முறை:
தந்தை இல்லாத ஆண்களும், கணவனை இழந்த பெண்களும் தலையில் ஏழு எருக்க இலைகளை வைத்து அதன்மீது அட்சதை,(முனை முறியாத பச்சரிசி) கறுப்பு எள்ளை வைத்து கிழக்கு நோக்கி நின்று நீராட வேண்டும். மற்றவர்கள் எள்ளைத் தவிர்த்து ஏழு எருக்க இலைகளோடு அட்சதையோடு மஞ்சள் பொடி வைத்து நீராட வேண்டும்.(நீராடும்போது வஸ்திரத்துடன் நீராடுவதே முறையானதென்று சாஸ்திரம் கூறுகின்றது.
ஏழு எருக்க இலைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி முறைப்படி அதில் அட்சதையும் மஞ்சளும் வைத்துக்கொண்டு கிழக்கு நோக்கி நின்று, பின் எருக்க இலைகளின் மேல் பாகம் தலையில் படும்படி வைத்து நீராட வேண்டும். அதன்பின் நாம் சூரிய பகவானை வழிபட வேண்டும்.
இந்த சூரிய வழிபாட்டின்போது நெய்விளக்கேற்றி தூபதீபம் காட்டி சர்க்கரைப் பொங்கல் ,உளுந்து வடை ,கோதுமையில் செய்த பலகாரங்கள் ஏதாவது செய்து சூரியனுக்கு படைத்து ஏழை எளியவர்களுக்கு கொடுப்பதுடன் அவர்களுக்கு வேண்டிய தான தர்மங்கள் செய்வதும் மிக புண்ணியமானதாகும்.
Leave a Comment