திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இன்று முதல் நேரடி இலவச டிக்கெட்... எங்கே கிடைக்கும்...?
திருப்பதி ழுமலையானை தரிசிக்க இன்று முதல் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதுவரை இணையம் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருந்தது. அதிலும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வாங்குபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஒரு மாதத்துக்கான டிக்கெட்களின் விற்பனை தொடங்கிய பத்தே நிமிடங்களில் அவை முடிந்துவிடும் நிலை இருந்தது.
இன்று முதல் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட உள்ளன. அவற்றை பக்தர்கள் நேரிலேயே சென்று பெற்றுக்கொள்ளலாம் என்று திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்காக திருப்பதி ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய மூன்று இடங்களில் இன்று காலை 9 மணி முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட உள்ளன. இதைப் பெற்றுக்கொள்ள ஆதார் அட்டை அவசியம். மேலும் இரண்டு தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்.
இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் நாளை காலை முதல் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தற்போது நாள் தோறும் முப்பதாயிரம் பேருக்கு மேல் தரிசனம் செய்துவரும் நிலையில் படிப்படியா தரிசனம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தேவஸ்தான அலுவலர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஏழுமலையானின் பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Leave a Comment