குருப் பெயர்ச்சி 2017 -பொதுப் பலன்கள்


 

குரு காயத்ரீ மந்திரம்

 

ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

 

குரு ஸ்லோகம்

 

தேவனாம்ச ரிஷீணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்

 

பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.

 

இவர் தான் குரு பகவான்

சொந்த வீடு - தனுசு, மீனம்

உச்சராசி - கடகம்

நீச்சராசி - மகரம்

திசை - வடக்கு

அதிதேவதை - பிரம்மா

நிறம் - மஞ்சள்

வாகனம் - யானை

தானியம் - கொண்டைக்கடலை

மலர் - வெண்முல்லை

வஸ்திரம் - மஞ்சள்நிற ஆடை

ரத்தினம் - புஷ்பராகம்

நிவேதனம் - கடலைப்பொடி சாதம்

உலோகம் - தங்கம்

இனம் - ஆண்

உறுப்பு - தசை

நட்புகிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்

பகைகிரகம் - புதன், சுக்கிரன்

மனைவி - தாரை

பிள்ளைகள் - பரத்வாஜர், கசன்

பிரதானதலங்கள் - ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்

 

 சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி நவக்கிரகங்களில் முழு சுப கிரகமாக திகழ்பவர் . நம்முடைய  வாழ்வில் எல்லா  விதமான செல்வங்களையும் வியாழ பகவான்  என்ற குரு பகவான் வழங்கிறார். வாழ்க்கையில் பணம், குழந்தை செல்வம் ஆகிய  முக்கியமான இரண்டு செல்வங்களை  அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்றவர் குரு பகவான்..

 

குரு பார்வை கோடி நன்மை

 

ஒருவர்  வாழ்வில் திருமணம் மிக  முக்கியமானது. அந்த திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக திகழ்பவர் குரு பகவான். குரு பார்வை அமைந்து விட்டால் திருமணத்துக்கு உரிய காலம் அமைந்து விட்டது என்று கருதலாம். குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவின் ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

 இந்தாண்டு  இன்று செப்டெம்பர் இரண்டாம் தேதி குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு மாறுகிறார். துலா ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து 1 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குகிறார். துலா ராசிக்கு வரும் குரு பகவான் விருச்சிக ராசிக்கு ஸ்ரீ ஹேவிளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18ம் தேதி - 04.09.2018 - வியாழக்கிழமையன்று மாறுகிறார். துலா ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் கும்ப ராசியையும் - ஏழாம் பார்வையால் மேஷ ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் மிதுன ராசியையும் பார்க்கிறார்.

:

2017 குரு பெயர்ச்சியினால் நன்மை பெறும் ராசிகள்: மேஷம் - மிதுனம் - கும்பம்

2017 குரு பெயர்ச்சியினால் நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: கடகம் - கன்னி - துலாம் - தனுசு - மகரம்

2017 குரு பெயர்ச்சியில் பரிகாரத்தின் மூலம் பயன்பெறக்ககூடிய  ராசிகள்: ரிஷபம் - சிம்மம் - விருச்சிகம் – மீனம்

 

பொது பலன்கள்:

கன்னி ராசியிலிருந்து  துலா ராசிக்கு இடம் பெயர்கிறார் குரு பகவான் . துலாம் என்பது வியாபாரம் சம்பந்தபட்ட ராசியா. இந்த ராசிக்கு அதிபதி அசுர குருவாகிய சுக்கிரன் ஆவார். சுக்கிரன் அழகு - கவர்ச்சி - ஆடம்பரம் - பொருள் - பணம் - வசதி - வெண்மை ஆகிய விஷயங்களுக்கு அதிபதியாவார். இந்த சுக்கிரனுடன்  அசுர குருவாக இருந்தாலும் தேவகுரு குருபகவானுடன் இணையும் போது அற்புதமான  பலன்களை அள்ளித் தருவார். குருவிற்கு துலாம் நட்பு வீடு. நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் தொல்லைப்படுத்தும் சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். செவ்வாய் சாரத்தில் மாறுவதால் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி ஏற்படும். மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும். பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். எதிரிகள் தொல்லை,  அண்டை நாடு, பகை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் கட்டுப்படுத்தப்படும்.

 

குருவை வணங்கி வாழ்வை மேம்படுத்தி உயர்வோம்

 

ஓம் குருவே நமஹ ....



Leave a Comment