சூரிய பகவானின் மகிமைகள் 


ஸ்ரீமன் நாராயணனே ராமச்சந்திர மூர்த்தியாக அவதரித்து ராவணனை அழிக்க முயன்ற சமயத்தில் அரக்கனின் பலம் அதிகரித்ததால் மனம் தளர்ந்த வேளையில் அகத்திய முனிவர் அண்ணல் ராமனிடம்  குலதெய்வமான ஆதவனை முறைப்படி வணங்கி வெற்றி பெறுவாயாக என்று கூற, அவ்வாறே வழிபட்டு ஸ்ரீராமபிரான் போரில் வெற்றி கண்டார்.

ஆதிசங்கரர் பகவத் பாதர் ‘சூரிய பகவானை’ வழிபாட்டு கடவுளாகக் கொண்ட சௌரம் என்ற மதத்தை ஸ்தாபித்தார்.

நக்கீரர்  திருமுருகாற்றுப்படையில் ‘உலகம் உவப்ப வலநேர்பூ திரிதரு, பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு’. என்று சூரியபகவானை போற்றி  வணங்கி துவங்குகின்றார்.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில்  ‘ஞாயிறு போற்றுதும்’, ஞாயிறு போற்றுதும் என்று  சூரிய பகவானைபோற்றி வணங்கியே  துவங்குகின்றார்.

அபிராமி பட்டர் உதிக்கின்ற செங்கதிர் என்றே ஆரம்பித்து  அபிராமி அந்தாதியை  பாடத் துவங்குகின்றார். மணிமேகலை என்னும் காப்பியத்தில் புத்தரை ‘புத்த ஞாயிறு’என்றே குறிப்பிட்டுள்ளார்.

‘யஜுர் வேதம் ‘சூரியபகவானின் பெருமைகளை போற்றியும், ‘சாம வேதம்’ அனைத்து வெற்றிகளை அளிப்பதாக போற்றியும் ‘அதர்வன வேதம்’பிணிகளை அகற்றியும் பசுவின் மடியில் உள்ள கிருமிகளை சூரியக்கதிர்கள் அழிப்பதாகவும் கூறுகிறது.
 



Leave a Comment