மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு....
மாசி மாதத்திற்கான பூஜைக்காக, சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ளது. சுவாமி தரிசனம் செய்ய வர விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுடன், கொரோனா இரண்டு தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., 'நெகட்டிவ்' சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாவின் போது தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட்டனர். தற்போது கோவிலுக்கு செல்ல 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
நாளை முதல் 17ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக அனுமதிக்கப்படுவார்கள் என சபரிமலை தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது.
13ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலான நாட்களில் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Comment