ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அஷ்டபுஜ மரகத ராஜ மாதங்கி சிலை வடிக்க சிறப்பு பூஜை.


இராணிப்பேட்டை மாவட்டம் , வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபிதம் செய்ய அஷ்டபுஜ மரகத ராஜமாதங்கி என்கிற சியாமளா தேவிக்கு சிலை வடிவமைக்க துவக்க பூஜை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது .

அஷ்டபுஜ ராஜ மாதங்கி என்பவர் எட்டு கைகளுடன்

பச்சை நிற மரகதக் கல்லில் சிலை வடிவமைக்க கயிலைமாமணி ஸ்ரீ முரளிதர சுவாமிகள் அவர்கள் அனுக்கிரகத்துடன்  5 டன் எடையுள்ள பச்சை நிற மரகதக் கல் கொண்டு வரப்பட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கியபீ டத்தில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. அக்கல் சிலை வடிவமைப்பதற்காக மகாபலிபுரம் செல்ல உள்ளது. மகாபலிபுரத்தில் உள்ள ஸ்ரீ லோகநாதன் ஸ்தபதியார் அவர்களின் பிரகாஷ் சிற்பக் கலைக் கூடத்தில் இந்த சிலை உருவாக உள்ளது. இந்த சிலை நம் ஆரோக்கிய பீடத்தின் 89 ஆவது சிலை ஆகும்.  பச்சை நிற மரகதக் கல் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளது.  இந்த  சிலை வடிவமைப்பின் துவக்கம் வருகின்ற வெள்ளிக்கிழமை 11-02-2022  காலை 6.00 மணி முதல் 7.30 மணிக்குள் வளர்பிறை தசமி திதி , மிருகசீரிஷம் நட்சத்திரம், கும்ப லக்னம் கூடிய சுப தினத்தில்  மகாபலிபுரம் சிற்ப கூடத்தில் நடைபெற உள்ளது. மகாபலிபுரம் சுற்றுப்பகுதியில் உள்ள நம் பக்தர்கள் & சந்தர்ப்பம் உள்ளவர்கள், இந்த துவக்க பூஜையில் கலந்து கொள்ளும்படி ஸ்ரீ முரளிதர சுவாமிகள் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இராஜ மாதங்கி

மதங்க முனிவரின் கடும் தவத்தின் பலனாக அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமானிடம்   “அன்னை பார்வதியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும்” எனவும், அந்த  “மகளை மணந்து கொண்டு ஈசன் தனக்கு மருமகனாக இருக்க வேண்டும்” என்றும்  வரம் கேட்டார். அப்படியே சிவனும் அருளினார். அதன்படி திருவெண்காடு ஆலயத்தில் உள்ள மதங்க புஷ்கரணியில் மலர்ந்திருந்த நீலோத்பல மலரில் ராஜமாதங்கி ஆடி மாத வெள்ளிக்கிழமையில் பிறந்தாள். அரச போகம் அளிக்கும் மாதங்கி தேவியின் அங்க தேவதைகளாக ஹசந்தி சியாமளா, சுக சியாமளா, சாரிகா சியாமளா, வீணா சியாமளா, வேணு சியாமளா, லகுஷ்யாமளா என ஆறு தேவிகள் தோன்றி கலைகளின் அதிபதிகளாக மாறினர். தேவியின் மரகதப் பச்சை வண்ணம் - ஞானத்தைக் குறிக்கிறது. கைகளில் உள்ள வீணை - சங்கீத மேதை என்பதை சொல்கிறது. கிளி - பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும் ஆத்ம ஞானத்தையும் காட்டுகிறது. மலர் அம்பு - கலைகளில் தேர்ச்சியையும், பாசம், ஈர்ப்பு, சக்தியையும், அங்குசம் - அடக்கி ஆளும் திறனையும், கரும்பு - உலகியல் ஞானத்தையும் குறிப்பதாக ஐதீகம். என்ற தகவலை தன்வந்த்ரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



Leave a Comment