குலதெய்வம் தெரியதவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு...?
தமிழர்களின் குலதெய்வம் என்று போற்றப்படும் முருகப்பெருமானின் கந்த சஷ்டி திருவிழா காலங்களில் ஆரம்பம் முதல் திருக்கல்யாணம் வரை விரதமிருந்து மது மாமிசம் என எதுவும் அருந்தாமல் உங்கள் குலதெய்வத்தை போற்றுவது போல முருகனை வழிபாடு செய்ய சகல நன்மைகளும், அதுதான் இதுதான் என்று இல்லாமல் அனைத்தும் கிடைக்கும், சூரசம்ஹாரம் முடிந்த உடன் நாம் என்ன செய்வோம் பொதுவாக கூட்டத்தை கலைத்து உடனே வீட்டிற்கு சென்று விடுவோம்,, இங்கு தான் தவறு நடக்கிறது,,
பெருமான் போரில் வெற்றி பெற்று வரம் தருவதற்காக மணக்கோலத்தில் இருக்கும் முருகனை தரிசனம் செய்வது மிகச் சிறந்தது,, சம்ஹாரம் முடிந்த பிறகு முருகனை சென்று பிரார்த்தனைக்கு வைத்து வழிபட திருமணம் மற்றும் குழந்தைகள் மிக எளிதாகக் கிடைக்கும்.
இந்த கந்த சஷ்டி காலங்களில் ஆறு நாட்கள் விரதம் இருந்து சூரசம்ஹாரம் முடிந்தவுடன் வீட்டுக்கு தயவுசெய்து வராதீர்கள், முருகனின் திருக்கல்யாணத்தை பார்த்து அவரின் பேர் அருள் பெற்று வாருங்கள். குலதெய்வம் தெரியாதவர்கள் முருகனை வழிபட்டால் அனைத்து பலன்களும் கிடைக்கும் என்பது நிச்சயம்.
Leave a Comment