தை அமாவாசைக்கு வீட்டு வாசலில் கோலம் போடுவதை தவிற்க வோண்டியது ஏன்?
வீட்டு வாசலில் கோலம் போடுவதும், பூஜை மற்றும் படையல் இடும்போது மணி அடிப்பதும் தெய்வத்துக்கு செய்யும் செயலாகும். இவைகளை செய்யும்போது தெய்வங்கள் மட்டுமே வீட்டுக்குள் வருவார்கள்.
வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை மற்றும் படையல் இடும்போது மணி அடித்தல் போன்றவை செய்யும்போது பித்ரு தேவனும், பித்ருக்களும் இதர ஆவிகளும் வீட்டுக்குள் வர முடியாது.
ஆகவே பித்ரு வழிபாடு செய்யும்போது வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. மணி அடிக்கக்கூடாது. அப்படி செய்தால் மட்டுமே, பித்ரு தேவன் வீட்டுக்குள் வந்து நீங்கள் செய்யும் பித்ரு பூஜை மற்றும் படையல்களை ஏற்று உங்கள் மூதாதையரிடம் சேர்த்துவிடுவார்.
உத்தராயண கால ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும், தட்சணாயன கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால் ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும் பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை மற்றும் மஹாளய பட்சம் பதினைந்து நாட்கள் ஆக மொத்தம் பதினெட்டு நாட்கள் மட்டுமே பித்ரு லோகத்தில் உள்ள பித்ருக்கள் பித்ருலோகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி உண்டு. இந்த பதினெட்டு நாட்கள் மட்டும் உங்கள் மூதாதையர் உங்களை தேடி வீட்டுக்கு வருவார்கள். நீங்கள் செய்யும் பித்ரு பூஜை மற்றும் படையல்களை உங்கள் மூதாதையர் நேரடியாக பெற்றுக்கொல்வார்கள்.
உங்களை பெற்றவர்கள் உங்களிடம் ஆசாரம் எதிர்பார்ப்பது இல்லை. அவர்கள் எதையும் பெற்றுக்கொள்ள தயாராக இருந்தாலும், ஆசாரம் இல்லாததை பெற்றுக்கொள்ள தடை இருப்பதால் அவர்களால் நீங்கள் தரும் ஆசாரம் இல்லாத பூஜை மற்றும் படையல்களை பெற்றுக்கொள்ளமுடியாது; பித்ரு தேவனாலும் பெற்றுக்கொள்ளமுடியாது.
Leave a Comment