16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடர் பிரதிஷ்டா வைபவம்


ஆயிரக்கணக்கான மந்திரங்களில் கருட மந்திரமான கருட பஞ்சாக்ஷரிக்குத் தனிச் சிறப்பு உண்டு.

தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பக்ஷாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்

கருடன் பட்சி ராஜன். பெருமாளின் வாகனம். பெருமாள் ஆலயங்களில் கருட வாகனத்தில் எழுந்தருளும் காட்சியைப் பார்க்கவே ஏராளமானோர் கூடுவார்கள். கருடன் வேத படிவமானவன். வேத மந்திரங்களை சொல்லி செய்யப்படும் வைபவத்தில் வேத வடிவமான கருடன் எழுந்தருளுவது மிகவும் சிறப்பாகும்.

கருடனை வணங்கினால் சகலவிதமான நன்மைகளும் பெருகும். கண் பார்வை குறைபாடுகள் அகலும் பகையும் பிணியும் நீங்கும். செல்வளம் கொழிக்கும். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுனம்.  சர்ப தோஷங்கள், நாக தோஷங்கள், விஷ ஜந்துக்களால் ஏற்படும் தோஷங்கள், திருமணத் தடை, புத்திர தடை, பூமி தோஷம், வாகனத்தடை, குடும்ப தடைகள் மேலும் வாகன விபத்து, கண்டங்கள், தோல் வியாதிகள் போன்ற பல்வேறு விதமான தடைகள் விலகும். தீராத நோய்கள் மற்றும் பார்வை கோளாறுகள் தீரும், மருத்துவ செலவுகள் குறையும், மனக்குழப்பம் நீங்கி தெளிவும் பெறலாம். தைரியமும் பெருகும், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வளரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும், கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகள் அனைவரும் நீங்கி எதிரியற்ற நிலை உருவாகும். கூர்மையான அறிவு, கூர்மையான புத்தி, கூர்மையான பார்வை கிடைத்து ஆயுள் அதிகரிக்கும், கடன் தொல்லை நீங்கும், பண வரவு அதிகரிக்கும், மகாலட்சுமி கடாக்ஷம் கிடைக்கும். நாட்டிற்கு வளம் சேர்க்கும் என்கிறார் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

 பிறரை வசியம் செய்வது, மயங்க வைப்பது, பகைவர்களை அடக்குவது, அந்தரத்தில் உலவுதல், நெருப்பிடையே பயம் இல்லாமல் புகுந்து செல்வது, இந்திரஜாலம் காட்டுவது, படிப்பில் நல்ல தேர்ச்சி, நினைவாற்றல், தேர்வில் வெற்றி ஆகியவற்றை கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுவதன் மூலமாகப் பெறமுடியும் என்று பத்ம புராணம் கூறுகிறது.

மேலும் கருட தண்டகத்தை பாராயணம் செய்து வந்தால் எதிரிகள் தொல்லை ஒழிந்து போகும். நோய் நொடிகள் அண்டாது. விஷ ஜந்துக்களால் எந்த விதமான துன்பமும் ஏற்படாது என்பது நம்பிக்கை. இத்தகைய பல்வேறு வகையான சிறப்புகள் வாய்ந்த பெரிய திருவடி என்று அழைக்கப்படும் பட்சி ராஜனான கருட பகவானுக்கு உலகில் முதல் தனி ஆலயமாக இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உயர பறக்கும் பெருமாளுக்கு உயரமான ஆலயம் நிகழும் பிலவ வருஷம் தை மாதம் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 6.2.2022 காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள்ளாக 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடன் சிலை பிரதிஷ்டா வைபவம் அரசு வழிகாட்டுதல் படி நடைபெறுகிறது. இவ் வைபவம் முன்னிட்டு கீழ்கண்ட நாட்களில் கீழ்கண்ட நிகழ்ச்சிகளின்படி வைபவங்கள் நடைபெறுகிறது.

16.8 அடி உயரமும், 4.2 அடி பீடத்துடன் 21 அடி உயரமும் 6.3 அடி அகலமும் சுமார் 20 டன் எடையுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருட பகவான் விக்கிரகம் மகாபலிபுரம் பிரகாஷ் சிற்பகலைக் கூடத்தில் திரு. லோகநாதன் ஸ்தபதி அவர்களால் வடிவமைக்கப்பட்டது. இந்த சிலை அமைக்க 1 வருட காலம் ஆகியது என்கிறார் ஸ்தபதி அவர்கள் 

தன்வந்திரி பீடத்தின் சிறப்பு

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை என்னும் கிராமத்தில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் சைவம், வைணவம், ஸ்ரீ சாக்தம், சௌரம், கௌமாரம் மற்றும் காணபத்யம் எனும 6 மதங்களுக்குரிய தெய்வங்களுடன் சிவ லிங்க ரூபமாக 468 சித்தர்களும் அமைந்து ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் அமைந்துள்ள ஆரோக்ய பீடத்தில் 88வது திருச்சன்னதியாக விஸ்வரூப அஷ்டநாக கல் கருடன் “ஓம் ஸ்ரீ தன்வந்திரி கருடாய நமஹ” என்ற சக்திமிக்க மந்திரத்தை பக்தர்கள் கைப்பட எழுதிய கோடிக்கணக்கான மந்திரங்களைக் கொண்டு பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருட பகவானுக்கு பாரத தேசத்தில் மிகப்பெரிய ஆலயமாக முதல் முதலில் அமையவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்ப்புதுபேட்டை, வாலாஜாபேட்டை,
இராணிபேட்டை மாவட்டம்,
 



Leave a Comment