திருப்பதியில் வைகுண்ட ஏகாதாசி திருவிழா 10 நாளில் ரூ.26 கோடி காணிக்கை வசூல்.....
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருந்த கடந்த 10 நாட்களில் ஏழுமலையானை 3 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் வழிபட்டுள்ளனர். கடந்த 13ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் அன்று முதல் நேற்று வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு இருந்தது.
இதனை முன்னிட்டு கடந்த 10 நாட்களிலும் 3 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்தனர். அவர்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்வதற்காக சொந்த ஊர்களிலிருந்து தேவஸ்தான அழைத்துவரப்பட்ட பட்டியல் இனத்தை சேர்ந்த பக்தர்கள்,பழங்குடி.இனத்தை சேர்ந்தவர்கள், மீனவர்கள் ஆகியோர் உள்ளிட்ட 6949 பக்தர்களும், 300 ரூபாய் தரிசன மூலம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனம் மூலம் 83 ஆயிரம் பக்தர்களும், தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கி 15 ஆயிரத்து 468 பக்தர்களும், தேவஸ்தானத்தின் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கிய் 1917 பக்தர்களும் கடந்த 10 நாட்களில் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்க வாசம் பிரவேசம் செய்தவர்களில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏழுமலையான் கோவிலில் மெய்நிகர் சேவைகளாக நடைபெறும் கல்யாண உற்சவம், கட்டண பிரம்மோற்சவம்,சகஸ்ர தீப அலங்கார சேவை, ஊஞ்சல் சேவை ஆகிய டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த 43 ஆயிரத்து 250 பக்தர்களும் கடந்த 10 நாட்களில் ஏழுமலையானை வழிபட்டனர்.
கடந்த 10 நாட்களில் பக்தர்களுக்கு 15 லட்சத்து 40 ஆயிரம் லட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 10 நாட்களில் பக்தர்கள் ஏழுமலையானுக்கு 26 கோடியே 60 லட்ச ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
Leave a Comment