மாங்காடு காமாட்சி அம்மன் தைப்பூசத் தெப்பத்திருவிழா அற்புதமான வீடியோ காட்சி....


மாங்காட்டில் அமைந்துள்ள புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோயிலில் 17- ஆம் ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத்திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் அன்று மூன்று நாட்கள் தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 

தற்போது கொரோனா காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ள  நிலையில், இன்று முதல் நாள் தெப்பத்திருவிழா பக்தர்களின் ஆரவாரமின்றி அமைதியாக நடைபெற்றது. கோயில் வளாகத்தில் அமைந்துள்ள திருக்குளத்தில் நடைபெற்ற இவ்விழாவில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

நாளை வரை மூன்று நாட்கள் நடைபெறும் இத்தெப்பத் திருவிழாவில், கோயில் அலுவலர்கள், முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் கூட்டமின்றி தெப்பத்திருவிழா அமைதியாக நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாங்காடு கோயில் நிர்வாகம் சார்பில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் இலட்சுமணன் மற்றும் கோயில் பரம்பரை தர்மகர்த்தா மணலி டாக்டர் சீனிவாசன் ஆகியோர் மேற்கொண்டனர்.



Leave a Comment