தை பிறப்பது மாலை...? காலை பொங்கல் வைப்பது சரியா...?
இந்த ஆண்டு தை மாதம் வெள்ளிக்கிழமை அன்று மாலையில், அதாவது 5.20 மணிக்கு பிறக்கிறது. வழக்கமாக தைத்திருநாள் 1-ந்தேதி அன்று அதிகாலையிலோ அல்லது நள்ளிரவிலோ பிறந்துவிடும். ஆனால் இந்த வெள்ளிக்கிழமை மாலை பிறப்பதால், பானை வைத்து பொங்கல் வைப்பது காலையிலா அல்லது மலையிலா என்ற கேள்வி எழுவதால் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வாக்கிய ரீதியாக அகஸ் கணக்கின்படி சூரிய பகவான் தை 1-ந்தேதி மாலை 5.20 மணிக்கு மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அப்போதுதான் மகா சங்கராந்தி புருஷர் பிறக்கிறார். உத்தராயண புண்ணிய காலமும் உதயமாகிறது. இதனால் மாலை நேரத்தில் தான் பொங்கல் வைக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.
தை 1 ஆம் தேதி சூரிய பகவான் உதித்த நேரமே நல்ல நேரம் என்று கணக்கில் கொண்டு, வெள்ளிக்கிழமை சந்திர ஓரையில் மீன லக்னத்தில் காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் புதுப்பானையில் அல்லது பாத்திரத்தில் பொங்கல் வைக்கலாம். பொங்கல் வைக்க சிறந்த நேரமாக இது கணக்கிடப்பட்டுள்ளது.
காலை 6.00 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யவும் நல்ல நேரமாகும். அதேபோல பிற்பகல் 02.30 மணி முதல் 3 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம். மாலை 05.00 - 06.00 வரையும் பொங்கல் வைக்க நல்ல நேரம் உள்ளது.
Leave a Comment