கருடன் வானில் வட்டமடிக்க... ஊர்வலமாக வரும் திருவாபரணப் பெட்டிகளில் இருப்பவை என்னென்ன?
இப்போதும் நடக்கும் அதிசயம் என்னவென்றால் திருவாபரணம் எங்கு சென்றாலும் கருடன் அதன் மேலேயே பறந்துவருவதுதான். சந்நிதானத்தைப் பெட்டி அடைந்ததும் கருடன் சந்நிதானத்தை மூன்றுமுறை வலம்வந்துப் பின் பறந்துமறையும். அப்படி என்னதான் இருக்கிறது அந்தத் திருவாபரணப் பெட்டிகளில்...
சபரிமலையில் மகிமை மிகுந்த தரிசனமாக விளங்குவது மகரஜோதி தரிசனம். ஐயப்பன் ஜோதி ஸ்வரூபனாகக் காட்சி கொடுக்கும் அருள் தரிசனம். மகர சங்கராந்தி அன்று ஐயப்பனுக்கு திருவாபரணங்களை அணிவித்து தீப ஆரத்தி காட்டியதும் ஐயப்பனின் மகர ஜோதி தரிசனத்தை பொன்னம்பலமேட்டில் நாம் காண முடியும். இந்தத் திருவாபரணப் பெட்டி பந்தள அரண்மனையிலிருந்து சபரிமலை வரை பயணித்து வந்து சரியாக மகரஜோதி தினத்தன்று சபரிமலை வந்து சேரும்.
இந்த நாளில் ஐயப்பன் திருவாபரணங்கள் அணிந்து பூரண சொரூபனாகக் காட்சி கொடுப்பான். இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்வார்கள். ஐயனின் இந்தப் பூரண சொரூப தரிசனம் என்ன? திருவாபரணப் பெட்டிகளில் என்ன இருக்கும் என்று நிறைய சாமிமார்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இதுகுறித்து குருசாமி அரவிந்த் ஸுப்ரமணியத்திடம் கேட்டோம்.
"மகர சங்கராந்தி தினத்தன்று பந்தள ராஜனின் காணிக்கையான திருவாபரணம் பெட்டிகளில் சபரிமலைக்கு எடுத்துவரப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். திருவாபரணம் 3 பெட்டிகளில் எடுத்துவரப்படும். பக்தர்கள் அதைக் காணும்போதே மெய்சிலிர்ப்பதைக் காண முடியும். இந்தத் திருவாபரணப் பெட்டியில் என்னதான் இருக்கிறது என்று பலரும் கேட்பதைக் காணமுடியும்.
சிலர் மணிகண்டன் பூமியில் வாழ்ந்தபோது அணிந்துகொண்டிருந்த ஆபரணங்கள் இது என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அது ஒரு ஏற்புடைய கருத்தாக இல்லை. ஏன் என்பதற்கான பதிலாகத் திருவாபரணப் பெட்டியில் என்னென்ன உள்ளன என்பதை அறிந்துகொண்டால் போதுமானது. திருவாபரணப்பெட்டிகள் மொத்தம் மூன்று. ஒன்று ஆபரணப்பெட்டி, வெள்ளிப்பெட்டி, கொடிப்பெட்டி. இதில் ஆபரணப்பெட்டியில்தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் இருக்கும்.
Leave a Comment