திருப்பதியில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் புக் செய்ய....
நாளை 28ஆம் தேதி மாலை 3 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடர்பான தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு.
அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களுக்கான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடர்பான விஐபி பிரேக் தரிசனம் டிக்கட்டுகளை தேவஸ்தானம் நாளை 28ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிட உள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிதாக துவங்கிய ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன டிக்கட்டுகள் வழங்கப்படுகிறது.
ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பக்தர்கள் வழங்கும் நன்கொடையை பயன்படுத்தி தேவஸ்தான நிர்வாகம் நாடு முழுவதும் ஏழுமலையான் கோவில்களை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில்
ஜனவரி முதல் தேதி அன்று ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் 1000 ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடர்பான விஐபி தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் நாளை மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் ஆன்லைன் மூலம் ஒவ்வொரு டிக்கெடிற்க்கும் தலா 10,000 ரூபாய் நன்கொடையும்,டிக்கட் கட்டணமாக தலா 500 ரூபாயும் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
வைகுண்ட ஏகாதசி தினமான 13ஆம் அடுத்த மாதம் தேதி அன்று பக்தர்கள் ஏழுமலையானை வழிபடும் வகையில் 300 ரூபாய் டிக்கெட்டுகளை ஆயிரம் எண்ணிக்கையில் நாளை மாலை ஆன்-லைனில் வெளியிடப்பட உள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அடுத்த மாதம் 13ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் திறந்திருக்கும்.
எனவே பக்தர்கள் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்வதற்கு வசதியாக 14ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் நாள் ஒன்றுக்கு 2000 என்ற எண்ணிக்கையில் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை மற்றும் டிக்கெட் கட்டணம் 500 ஆகியவற்றை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
அதேபோல் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் ஸ்ரீவாணி அறக்கட்டளை திட்டத்தின்கீழ் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 200 விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளையும்,சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 300 விஐபி பிரேக் தரிசன டிக்கெட் களையும் தேவஸ்தானம் நாளை மாலை ஆன்-லைனில் வெளியிட உள்ளது அவற்றையும் பக்தர்கள் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடையாக 10,000 ரூபாயும் டிக்கெட் கட்டணம் 500 ரூபாயும் செலுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
Leave a Comment