கும்ப ராசிக்கு 2022 ஆம் ஆண்டு எதிர்ப்புகள் விலகும்....
கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)
கிரகநிலை:
ராசியில் குரு - சுக ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், சுக் (வ), சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரக மாற்றங்கள்:
21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14-04-2022 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
கும்ப ராசி அன்பர்களே இந்த வருடம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை வண்டி - வாகனங்கள் - இயந்திரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தும் போது கவனம் தேவை. மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். நீங்கள் நிதானமானவர்கள் அதே வேளையில் பொருளாதார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். வெளிநாட்டு தொடர்புகளில் ஆதரவு நீடிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம். பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். எதிர்பார்க்கும் பணி இட மாற்றம் - பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
கலைத்துறையினருக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும்.
அரசியல்வாதிகள் எதிரிகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பர். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு வரும். கட்சியில் புதிய பணிகளைச் சாதுர்யமாகச் செய்து முடிப்பீர்கள். செல்வாக்கு உயரும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தொண்டர்களையும் அனுசரித்துச் செல்லவும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்:
இந்த வருடம் தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள். மனதில் இருந்த கவலை நீங்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வீண் கவலை ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம். குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும்.
சதயம்:
இந்த வருடம் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. இருந்த பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். வெற்றிபெற தடைகளை தாண்டி உழைக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது. வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:
இந்த வருடம் பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.
பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர எதிர்ப்புகள் அகலும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி
அதிர்ஷ்ட ஹோரைகள்: சனி - புதன் - சுக்ரன்
எண்கள்: 6, 7, 8
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீஆஞ்சநேயாய நமஹ” என்ற ம்ந்திரத்தை தினமும் 17 முறை சொல்லவும்.
செல்ல வேண்டிய ஸ்தலம்: சிவன் கோவில்களுக்குச் சென்று வரவேண்டும்.
மலர் பரிகாரம்: முல்லைப் பூவை சிவனுக்கு அர்பணித்து வணங்கி வருவது நல்லது.
Leave a Comment