விருச்சிக ராசிக்கு 2022 ஆம் ஆண்டு மதிப்பும், அந்தஸ்தும் உயரும் 


விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:
ராசியில் செவ்வாய், கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், சுக் (வ), சனி - சுக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:
21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
14-04-2022 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வருடம் பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். 

குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. மனோ தைரியம்  அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும். எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும்.  புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். தந்தை வழி தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். புது நிறுவனங்கள் தொடங்க ஆவல் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லவிதமாக நடந்து முடியும். 

பெண்களுக்கு எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். 

மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். 

கலைத்துறையினர் வேலைகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது,

அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

விசாகம் 4ம் பாதம்:
இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். கணவன், மனைவிக்கிடையே  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

அனுஷம்:
இந்த வருடம் மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும்.  கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலிடத்திடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.  வீண் அலைச்சல் ஏற்படலாம். அவசரப்படாமல்  நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம்.  உங்கள் எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாணவர்கள் கூடுதலாக பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

கேட்டை:
இந்த வருடம் புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். 

பரிகாரம்: முருகனுக்கு பாலபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வணங்க மன அமைதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி
அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய் - குரு - சந்திரன்
எண்கள்: 4, 5, 7
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் கார்த்திகேயாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லவும்.
செல்ல வேண்டிய ஸ்தலம்: முருகன் கோவில்களுக்குச் சென்று வரவும்.
மலர் பரிகாரம்: செவ்வரளிப் பூவை முருகனுக்கு அர்பணித்து வரவும்.
 

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
 



Leave a Comment