காலனை வெல்லும் கால பைரவருக்கு சோடஷ தீப தைலம் பூஜையுடன் அஷ்ட திரவிய அபிஷேகம்


இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 23.12.2021, வியாழக்கிழமை மார்கழி 8ம் தேதி தேய்பிறை பஞ்சமி நாளில் மாலை 3.30 மணி முதல் 6.30 மணிக்குள் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அஷ்டகால பைரவர் மற்றும் மஹா பைரவருக்கு சோடஷ தீப தைலம் பூஜை (கரிசலாங்கண்ணி தைலம், இலுப்பை பட்டை தைலம், வெட்டி வேர் தைலம், வில்வாதி தைலம், பொன்னாங்கண்ணி தைலம், மருதாணி தைலம், விளக்கெண்ணெய் தைலம், பிருங்காதி தைலம், புங்கன் தைலம், இலவங்கப்பட்டை தைலம், கருஞ்சீரகம் தைலம், செம்பருத்தி தைலம், பசு நெய் தைலம், நல்லெண்ணெய் தைலம், தேங்காய் எண்ணெய் தைலம், கற்பூரம் தைலம்) போன்ற 16 விதமான தைலங்கள் கொண்டு மாபெரும் தீப தைலம் பூஜை செய்து (தைலம் காப்பு வைபவம்) அதனை தொடர்ந்து (பால், தயிர், அரிசி மாவு, பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், விபூதி) போன்ற அஷ்ட விதமான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு மஹா அபிஷேகமும் அதனை தொடர்ந்து புனுகு தைலம் சார்த்தி சிறப்பு ஆராதனைகள் அஷ்ட கால மஹா பைரவருக்கு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி நடைபெறவுள்ளது.

ஜோதி வடிவான இறைவனை வழிபடுவது இந்து தர்மத்தின் மாபெரும் கருத்தாகும். ஜோதியின் நாயகனாக அருணாச்சலேஸ்வரரும், ஸ்ரீ ஐயப்பனும் திகழ்ந்து வரும் நம் நாட்டில் ஆதிமனிதன் ஒளியாய் வழிபட்ட இறைவனுக்குத் தான், நம் முன்னோர்கள் உருவம்  கொடுத்து விளக்கில் தீபம் ஏற்றி வழிபடலானார்கள்.

 இல்லத்திலும் இறைவனை எழுந்தருளச் செய்ய வேண்டும் என்பதற்காகவே வீட்டிலும் திருவிளக்கேற்றும் முறையை முன்னோர்கள் கொண்டு வந்தனர். அந்த விளக்கை எப்படி ஏற்ற வேண்டும். எவ்வாறு  ஏற்ற வேண்டும் எந்த திசை நோக்கி ஏற்ற வேண்டும் என வகுத்துள்ளார்கள். ஒவ்வொரு திசைக்கும் அருள் கடாட்சம் உண்டு என்பதை அறிந்திருந்தார்கள்.

 விளக்கில் கிழக்கு முகம் பார்த்து ஏற்றினால் துன்பம் அகலும், வீட்டில் உள்ள பீடைகள் ஒழியும். மேற்கு முகம் நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை தீரும்.

சனி தோஷம் விலகும். வடக்கு முகம் பார்த்து ஏற்றினால் செல்வம் பெருகும். திருமணம் போன்ற மங்கள காரியம் உண்டாகும். கல்வி சிறக்கும். ஞானம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

 தைலத்தின் சிறப்பு

 தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் (எண்ணெய்) தைலத்தில் கூட பலன்கள் இருக்கிறது. அந்த வகையில் முக்கூட்டு தீப எண்ணெய், பஞ்ச தீப எண்ணெய், அஷ்ட தீப எண்ணெய், நவ தீப எண்ணெய், சோடஷ தீப எண்ணெய் என பலவகை  எண்ணெய்களில் தீபம் ஏற்றுவதாலும் இறைவனுக்கு அபிஷேகம் எனும் தைலம் காப்பு செய்வதால்  பல்வேறு பலன்கள் உண்டாகும்.

 அந்த வகையில் பசு நெய், நல்லெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், இலுப்பை எண்ணெய், புங்க எண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய்,  சந்தனாதி தைலம் போன்ற 16 தைலங்களுக்கும் பல்வேறு தனித்துவம் உண்டு.

 உதாரணமாக பசு நெய் - வீட்டில் ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் உண்டாகும். அஷ்ட லட்சுமிக்கு உகந்தது.

 நல்லெண்ணெய் - கால கிரக தோஷம் போக்கும். மகா பைரவருக்கு ஏற்றது. காவல் தெய்வங்களான  சுடலைமாடன், முனீஸ்வரன், அய்யனார், சாஸ்தா, மதுரைவீரன், காத்தவராயன் அம்மன் முதலான தெய்வங்களுக்கு உகந்தது.

ஆமணக்கு எண்ணெய் - இல்லத்தில் மன அமைதி கிட்டும். தம்பதியரிடையே  ஒற்றுமை ஓங்கும். தட்சிணாமூர்த்திக்கு உகந்தது.

இலுப்பை எண்ணெய் - கடன் தொல்லை அகலும். இல்லத்தில் சந்தோஷம் நிலைக்கும். மகிழ்ச்சி தங்கும். இறைவனுக்கு உகந்தது. குல தெய்வத்திற்கு ஏற்றது.

 புங்க எண்ணெய் - திருமணத்தடை நீங்கும். குழந்தை பேறு கிட்டும். சர்ப்ப தோஷம் விலகும். நாக தெய்வத்திற்கு உகந்தது. நாகம் குடை பிடிக்கும் அம்மன் மற்றும் சுவாமிக்கு ஏற்றது.

 வேப்ப எண்ணெய் -  எதிரிகள் தொல்லை நீங்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும். எதிர்மறை எண்ணங்கள் விலகும். பராசக்திக்கு உகந்தது. காளி, வராகி அம்மனுக்கு ஏற்றது.

 தேங்காய் எண்ணெய் - கண் திருஷ்டி நீங்கும்.  வியாபாரம் செழிக்கும். விளைச்சல் அதிகரிக்கும். பகவதி அம்மனுக்கும், விநாயகருக்கும் ஏற்றது. இன்னல்களை போக்கும். தடைகளை தகர்த்தெறிய வைக்கும். அன்னலட்சுமிக்கு உகந்தது.

 சந்தனாதி தைலம் -  வீட்டிலும், வணிக நிறுவனத்திலும், தொழில் ஸ்தாபனத்திலும் செல்வம்  பெருகும். குபேரன் அருள் கிட்டும்.

 இத்தகைய மகத்துவம் வாய்ந்த 16 தைலங்களை கொண்டு காலனை வெல்லும் மஹா கால பைரவருக்கும் அஷ்ட பைரவருக்கும் வருகிற 23.12.2021, வியாழக்கிழமை மார்கழி பஞ்சமி மற்றும் அகத்தியர் அவதரித்த மார்கழி ஆயில்யம் நட்சத்திரத்தில் சோடஷ தீப தைலம் பூஜை மற்றும் அஷ்ட திரவிய அபிஷேகம் ஸ்ரீ அகஸ்திய பெருமானின் வாக்கின்படி தன்வந்திரி பீடத்தில் மிக விமர்சையாக உலக நலன் கருதி, உலக மக்கள் நலன் கருதி நடைபெறுகிறது.

 மேலும் விவரங்களுக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
தொலைபேசி : 04172 - 294022, செல் – 94433 30203
 



Leave a Comment