தைரியம் அளிக்கும் அனுமனின் மஹா மந்திரம்
எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்க எவன் கானப்படுகிரானோ, அவனே மாருதி எனும் வாயுபுத்திரன்' என்ற வாசகங்களால் ஆஞ்சநேயன் எனும் ஹனுமனுக்கு அடையாளம் காட்டபடுகிறது. ராம ஸேவை ஒன்றையேலட்சியமாகக் கொண்டு, ராமநாமத்தையே யுகம் யுகமாக ஜபித்துக் கொண்டு இருப்பவன் சிரஞ்சீவியான அனுமன்.
நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய
தேவ்யைச தஸ்ய ஜனகாத்மஜாயை
நமோஸ்து ருத்ர இந்தர யம அநிலேப்யக
நமோஸ்து சந்தராக்க மருத் கணேப்ய:
என்ற அனுமனின் மஹா மந்திரம் உடலில் அயர்ச்சியையும் உள்ளத்தில் தளர்ச்சியையும் ஒருங்கே அகற்றி புத்துணர்ச்சியும் , தெளிவும் ,தைரியமும் அளிக்கும் மாமருந்தாக திகழ்கிறது. நமக்கு எப்பொழுதெல்லாம் சோர்வு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதாவது உடலும் உள்ளமும் துவளும் போதெல்லாம் வாயுபுத்திரன் அனுமன் புஷ்டியை அளித்துக் காப்பான். சங்கடங்கள், ஆபத்துகள் நிறைந்த நேரங்களில் மனம் நிலைகுலையாது செயலாற்றும் நிர்பயத்துவம் என்ற பயமின்மை தரும் மகிமை அனுமனை வணங்கினால் கிடைக்கும்.
Leave a Comment