சபரிமலையில் இன்று முதல் 60 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி
சபரிமலை மண்டல பூஜை நெருங்குவதையொட்டி தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் செல்லவும், நேரடி நெய் அபிஷேகத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அய்யப்ப பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தற்போது தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 40 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு மூலம் 5 ஆயிரம் பக்தர்களும் அய்யப்ப சாமியை தரிசனம் செய்தனர். அதே சமயத்தில் மண்டல பூஜை நெருங்குவதையொட்டி கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என அய்யப்ப பக்தர்கள் சார்பில் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசிக்க கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் செல்லலாம். ஆன்லைன் முன்பதிவு மூலம் 50 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலையொட்டி இதுவரை நெய் அபிஷேகம் நேரடியாக நடைபெறவில்லை. இந்தநிலையில் பழைய நடைமுறைபடி அய்யப்பசாமிக்கு நேரடியாக அபிஷேகம் செய்யலாம். இனிமேல் பாரம்பரிய எரிமேலி காட்டுப்பாதை வழியாகவும் பக்தர்கள் செல்லலாம். இன்று முதல் புதிய உத்தரவு அமலுக்கு வருகிறது.
Leave a Comment