மார்கழி மாதம் பிறக்கிறது செய்ய வேண்டியவை எது? செய்யக்கூடாதவை எது?
மார்கழியில் இறைவனின் திருநாமத்தை ஜெபிக்கக்கூடிய பஜனையில் கலந்துகொள்ளலாம். திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை மார்கழி மாதத்தில் கட்டாயம் படிக்க வேண்டும். 30 நாளும் தப்பாமல் கோதை நாச்சியாரின் பாசுரங்களை கேட்டாலே நமக்குப் புண்ணியம்.
மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி கட்டாயம் படிக்க வேண்டும். பக்திக்குரிய மாதம், பணிவாக இறைவனைச் சென்று அடைவதற்குரிய மாதம்.
வைகுண்ட ஏகாதசியும், ஆருத்திர என்கிற திருநாளும் வருகின்ற மாதம் இந்த மார்கழி மாதம். இதையெல்லாம் மகிழ்ச்சியாகப் புத்துணர்ச்சியாக கொண்டாட இறைவன் நமக்கு அருள் புரிய வேண்டும்.
மார்கழி மாதத்தில் அதிகாலைக்குப் பிறகு தூங்கக்கூடாது. நாலரை மணிக்கு எல்லாம் கண்டிப்பா குளிக்க வேண்டிய மாதம் மார்கழி மாதம்.
அதிகாலை நேரத்தில் இயற்கையில் இருந்து நமக்குக் கிடைக்கக்கூடிய ஆதீதமான ஆக்சிஜன் சக்தி உடலுக்கு அந்த ஆண்டு முழுவதும் கிடைக்கும்.
மார்கழி மாதத்தில் விதை விதைத்தால் அந்த விதை சரியான உயிர் தன்மைப் பெற்று வளராமல் போய்விடும் என்பதாலேயே அதிகமான திருமணங்கள் மார்கழி மாதத்தில் செய்யக்கூடாது என்று சொல்வார்கள்.
மார்கழி மாதத்தில் இரவில் கோலம் போடக்கூடாது, கோலம் என்பது அழகுக்காக மட்டும் இடக்கூடிய விஷயம் அல்ல. அது தர்மத்திற்காக இடக்கூடியது.
Leave a Comment