சபரிமலையில் கட்டுப்பாடுகள் தளர்வு.... சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கவும் அனுமதி....


கேரளாவில் கொரோனாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு தளர்வுகளை கேரள அரசு அறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் தளர்வுகளை அளிப்பது குறித்து கேரள முதல்வர் பினராயிவிஜயன், திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு நிர்வாகிகள், தேவஸம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன்,உயர் அதிகாரிகள் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையின் முடிவில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை கேரள அரசு அறிவித்துள்ளது. இதன்படி, சபரிமலைக்கு பக்தர்கள் வழக்கமாக வரும் பம்பையிலிருந்து நீலிமலை ஏற்றம், அப்பச்சி மேடு, மரக்கூட்டம் ஆகிய பாதைகளை மீண்டும் திறக்கவும் அதில் பக்தர்களை அனுமதிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. நீலிமலை மற்றும் அப்பச்சி மேட்டு பகுதியில் பக்தர்கள் வசதிக்காக மருத்துவ வசதிகள் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.

சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி 500 அறைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ள நீர் குறைந்துவிட்டதால், பக்தர்கள்சமூக விலகலைக் கடைபிடித்து, குளிக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment