குழந்தை பாக்யம் வேண்டி தன்வந்திரி பீடத்தில் முப்பெரும் யாகங்கள்
திருமணத் தடையால் பெண்களும், ஆண்களும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகின்றனர். பல குடும்பத்தினரும் தங்கள் வீட்டுப் பையனுக்கு மணமகள் தேடித் தேடிச் சலித்துப் போய் விடுகிறார்கள். இதேபோல் பெண் வீட்டினரும் மணமகன் சரியாக அமையாமல் தவிக்கின்றனர். ஒன்று இருந்தால், இன்னொன்று அமையாமல் தொடர்ந்து திருமணத்தில் தடையாகிறது.
ஒருவரது ஜாதக ரீதியாக ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் களத்திர தோஷம், சர்ப தோஷம், குரு பலன் இல்லை இதுபோன்ற காரணங்களால் திருமணம் தடை ஏற்படும். ருது தோஷம் என்பது ஒரு பெண் வயதுக்கு வந்த நேரத்தை வைத்து ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருந்தால் திருமணம் செய்ய தாமதம் ஆகும். திருமண வயது வரும் பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் திருமணம் தாமதம் ஆக வாய்ப்பு உண்டு என்கின்றனர் ஜோதிடர்கள்.
பெண்களின் திருமணத் தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமமும், ஆண்களின் திருமணத் தடை நீங்க ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமமும்,குழந்தை பாக்கியம் வேண்டி சந்தான கோபால யாகம்,சந்தான பரமேஸ்வரர் ஹோமம் பிரதி பௌர்ணமி மற்றும் பக்தர்கள் விருப்பத்திற்கு ஏற்ற நாளில் வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் நடைபெற்று வருகிறது அவரவர் வசதிக்கு தகுந்தவாறு செய்து கொள்ளலாம் என்கிறார் பீடாதிபதி யக்ஞ ஸ்ரீ டாக்டர் முரளிதர ஸ்வாமிகள்.
இத்தகைய சிறப்பு மிக்க ஹோமம் பிரதி மாதம் பௌர்ணமி தோறும் காலை 10.00 மணிக்கு நடை பெறுகிறது. மேலும் அன்ன தோஷம் விலக ஸ்ரீ ராகு கேதுவுக்கு அன்னாபிஷேகமும்.நட்சத்திர தோஷங்கள் விலக 27 நட்சத்திர சாந்தி ஹோமமும் நடைபெற உள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், வருகிற 18.12.2021, சனிக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம் ஆண்கள் திருமணத் தடை நீக்கும் கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம் என முப்பெரும் யாகங்கள் நடைபெறுகிறது.
சுயம்வர கலா பார்வதி ஹோமம் பலன்கள்
இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் மூலம் மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், வசீகர தோஷம், போன்ற எல்லாவிதமான திருமணத் தடைகளும், தோஷங்களும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கவும் சுயம்வர கலாபார்வதி யாகமும் பெண்களுக்கு கலசாபிஷேகமும், மாங்கல்ய பூஜையும் நடைபெற உள்ளது.
பார்வதி தேவியை மனதில் நினைத்து துதித்து வந்தால் அனைத்து திருமண தடைகள், தாமதங்கள் தகர்த்து, விரைவில் திருமணம் நடக்கச் செய்யும். மேலும் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். தம்பதிகளிடையே அந்நியோன்யம் வளர மற்றும் குழந்தைப்பேறில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளவும் செய்யும் ஹோமம் ஆகும்.
ஆணும், பெண்ணும் உடல்ரீதியாக வேறுபடுகின்றனரே தவிர அவர்களின் ஆன்மா ஒன்று தான் என்பது ஆன்மீகத்தின் முடிவு. இல்லற வாழ்வில் ஆண், பெண் உடலால் இருவராக இருந்தாலும் உயிரில் ஒன்று கலந்து வாழ்வார்களேயானால் அவர்களின் வாழ்க்கை சிறக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் சிவபெருமானின் அர்த்தநாரீஸ்வர தத்துவம். மனித குலத்தில் பெண்ணாக பார்வதி தேவி சிவபெருமானை கணவனாக அடைய உதவிய இந்த ஸ்வயம்வர பார்வதி ஹோமம் ஆகும்.
கந்தர்வ ராஜ ஹோமம் பலன்கள் :
திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு உள்ள செவ்வாய் தோஷம், சுக்கிர தோஷம், களத்திர தோஷம் போன்ற சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற கந்தர்வ ராஜ ஹோமமும், கலசாபிஷேகமும் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் பங்குபெறுபவர்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடக்க வழிவகை செய்கிறது. இதில் பங்கேற்கும் நபர்களுக்கு கலசாபிஷேகம் நடைபெறும்.
சந்தான கோபால யாகம் பலன்கள்
குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு ஏற்படுகின்ற காலசர்ப தோஷம், சர்ப தோஷம், பித்ரு தோஷம், குலதெய்வ சாபம் போன்ற பல்வேறு தோஷங்கள் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சந்தான கோபால யாகமும், ஸ்ரீகிருஷ்ணருக்கு தொட்டில் பூஜையும் நடைபெற உள்ளது. இந்த யாகம் செய்வதின் மூலம் எல்லாவிதமான தடைகளும் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருள் பெற ஸ்ரீகிருஷ்ணருக்கு வெண்ணை சார்த்தி வழிபடும் பொழுது பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
பக்தர்கள் பங்கேற்பு
இந்த முப்பெரும் யாகங்களில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிர்வத்தித்து பிரசாதம் வழங்க உள்ளார். இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் பங்கேற்க ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் அழைக்கின்றனர்.
இங்கு வந்தாலே தடைகள் நீங்கி பலன் கிடைக்கிறது. திருமணத் தடைகள் விலகி திருமணம் நல்லபடியாக நடக்கிறது என்று பயன் அடைந்தவர்கள் பாராட்டுகின்றனர்.
தன்வந்திரி பீடத்தில் திருமணத் தடை மட்டுமின்றி வேலை வாய்ப்பில் தடை, இழந்த பொருள், காணாம பொருள் கிடைக்க தொழில் முன்னேற்றம் இல்லாத நிலை, பொருளாதாரம் முன்னேற்றம் இல்லாத நிலை, தம்பதிகள் ஒற்றுமை. குழந்தையின்மை பிரச்னை,கண் திருஷ்டி விலக. குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் உயர்வு பெற போன்ற 100 க்கும் மேற்பட்ட ஹோமங்கள் இங்கு நடைபெற்று வருகிறது என்கிறார் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி முரளிதர ஸ்வாமிகள்.
இங்கு ஹோமத்தில் வைத்து கொடுக்கும் பிரசாதங்களை அவரவர் பூஜையறையில் வைத்து வழிபட்டு, அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் குங்குமம், ஹோம பஸ்மம் அட்சதை, ஹோம மை போன்றவற்றை திருமணம் நடக்க வேண்டிய ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தை வேண்டி பங்கேற்ற தம்பதிகள் தினமும் தங்களின் நெற்றியில் இட்டு வர வேண்டும். இந்த பரிகார முறைகளை நம்பிக்கையுடன் சரியாக கடைபிடிக்கும் பட்சத்தில் திருமண தடை, தாமதங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்கிறார் முரளிதர ஸ்வாமிகள். இடம்: ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா, வாலாஜா பேட்டை, இராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. தொடர்புக்கு 94433 30203
Leave a Comment