உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்று இருந்தால் காதலில் கூட வெற்றிதான்.... .
சுக்கிரன் இவர் களத்திர காரகன் என அழைக்கப்படுகிறார். அசுர குரு சுக்கிரன் ஆவார். உலக இன்பங்களுக்கும் ஆடம்பரமான வாழ்விற்கும், அமோகமான வாழ்விற்கும் சுக்கிரன் தான் காரணமாகிறார்.
காமஇச்சை,வாகனம்,ஆடைகள் ஆபரணங்கள், அலங்காரம், வாசனை திரவியங்கள், சங்கீதம், அழகு,வியாபாரம், நடனம்,நடிப்பு ஆகியவற்றுக்கு காரணம் ஆகிறார். இவருக்கு 7 ஆம் பார்வை மட்டுமே உண்டு. அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதி சுக்ரன். காதல், சுக போகம் இவற்றிற்கு அதிபதி சுக்ரனே.
ஜோதிடப்படி களத்திரகாரகள் சுக்கிரன். இவனே வாகனங்களுக்கும் அதிபதி. ஜனன உறுப்புகளைக் காப்பவன் இவனே. சிற்றின்பத்தை நுகர வைப்பவனும் இவரே.
உடலில் வீர்யம் இவன். அணிமணி, ஆபரணம் சுக்கிரன் அருள் இருந்தாலே சேரும். கிழக்குத் திசை சுக்ரனுக்கு உரிய திசை. இந்திராணி இவருக்கு அதி தேவதை. இந்திர மருத்துவன் பிரத்யதி தேவதை. வைரம் சுக்ரனுக்கு உகந்த ரத்தினம்.
கருடனே சுக்கிரனின் வாகனம். கலைக்கு காரகன் சுக்கிரன். பரணி, பூரம், பூராடம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன். ரிஷபம், துலாம் ஆட்சி வீடுகள், மீனம் உச்ச வீடு, கன்னி நீச வீடு. சுக்கிரன் சந்திரனுடன் கூடி பலமுடன் 10ல் இருந்தால் நடிப்புகலையில் தேர்ச்சிபெற்று, குறிப்பிட்ட ஜாதகர் அல்லது ஜாதகி நட்சத்திர ஸ்தானம் பெற்று அவ்வகையில் அதிர்ஷ்டசாலியாக திகழ முடியும்.
லக்னம் எதுவானாலும் சரி சுக்கிரன் 10வது வீட்டில் தனித்திருப்பாரானல் நிச்சயமாக கலைத்துறை ஓன்றில் பாண்டித்யம் பெற்று அதனால் மற்றோரை பரவசபடுத்துகின்ற ஆற்றல் அமைந்து அவ்வகையில் அதிர்ஷ்டம் பெற முடியும். பொருட்களை வாங்குவதும், விற்பதும் இன்றைய வாழ்வியலில் முக்கியமான தொழில் ஆகும். இந்த தொழில் வளமையை ஏற்படுத்துவார் சுக்கிரன்.
சுக்கிரன் பலம் பெற்று இருந்தால் காதலில் வெற்றிகிடைக்கும். ஓருவரது ஜாதகத்தில் சுக்கிரன் தசாகாலம் நடக்கும் போது நல்லமுறையில் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய சிற்றின்ப, பேறின்பங்களுக்கு வழிவகுப்பார்.
Leave a Comment