வீட்டின் இந்த மூலையில் படுக்கை அறை அமைந்தால் இவ்வளவு பிரச்சனையா....?
வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று நீர் தொட்டி. தென்மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் நீர் உபயோகத் தொட்டி அமைய வேண்டும், கழிப்பிடம் தெற்கு அல்லது வடக்கு நோக்கி அமருமாறு அமைய வேண்டும்.
செப்டிக்டேங்க் வடமேற்கு அல்லது தென்கிழக்கே காம்பவுண்டு சுவரை தொடாமல் கட்ட வேண்டும். அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அமைவது நல்லது. வீடு மற்றும் காம்பவுண்டின் வடகிழக்கு மூலை வளைவாக இருக்க கூடாது.
மாடிப்படி தென்மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் அமைய வேண்டும். வீட்டிற்கு தெற்க்கு மேற்கு உயர்ந்து இருக்க வேண்டும். வடகிழக்கில் குடிநீர் குழாய் இருத்தல் வேண்டும்.ஈசானிய மூலையில் மண் அமைத்து அருகம்புல், துளசி வளர்பது நல்லது. உயரமான துளசி மாடம் கட்டக்கூடாது.
ஆட்டுக்கல், அம்மி, தெற்கு, மேற்கு, தென்மேற்கு,தென்கிழக்கு பகுதிகளில் அமைக்கலாம். வடகிழக்கு பகுதிகளில் அமைக்க கூடாது. பிரிட்ஜ் கிரைண்டர் போன்ற மின்சாதனப் பொருள்கள் அறையின் தென்கிழக்கில் அமைக்கலாம்.
ஈசானிய மூலையில் குப்பை கூளங்களை குவித்தல் கூடாது. அக்னி மூலையில் படுக்கை அறை கூடாது. தெற்கு பார்த்து சமைக்காதீர். மருத்துவ செலவுகளுக்கு வழி கோலும். உண்ணல் படித்தல் கிழக்கு நோக்கி இருப்பதுதான் நல்லது. வடக்கே தலை வைத்து படுக்கை அமைப்பது கூடாது. ஈசானிய மூலையில் மாடிப்படி கூடாது.
வீட்டின் வடக்கே, கிழக்கே உயராமாக வளரும் நிழல் தரும் மரங்கள் வள்ர்க்ககூடாது. வீட்டின் தெற்கு அல்லது மேற்கே உள்ள உயரமான மரங்களை வெட்டக் கூடாது. ஈசானிய மூலையில் சமையல் அறை கூடாது. வீட்டின் வடகிழக்கில் நீர்தேக்கத் தொட்டி அமைக்கக் கூடாது.
Leave a Comment