திருகார்த்திகை தீபத்திருநாளின் சிறப்புகள்....


கார்த்திகை தீபம் தமிழர்களின் பராம்பரிய திருவிழாவாகும். கார்த்திகை தீபம் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா திருக்கார்த்திகை என்றும் தீபத்திருவிழா என்றும் சிறப்பிக்கப்படுகிறது.

கார்த்திகை தீப வழிபாடு பற்றி சங்கநூலான புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது. ஒளவையார் மற்றும் திருஞானசம்பந்தர் கார்த்திகை தீப வழிபாடு பற்றி தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக திருமால், நான்முகன் உள்ளிட்ட உலக உயிர்களுக்கு காட்சியருளிய நாளாகக் கருதப்படுகிறது. முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்களின் நினைவாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

மகாபலிச் சக்கரவர்த்தி ஆணவத்தால் உடலில் பெற்ற புண்கள் குணமாக நெய் தீபம் ஏற்றி வந்தார். கார்த்திகை தீபத்தன்று நெய் தீபம் ஏற்றியபோது மாபலியின் புண்கள் குணமாகின. அது முதல் திருகார்த்திகை அன்று தீபம் ஏற்றும் வழக்கம் ஏற்பட்டதாகவும் கருதப்படுகிறது.

திருக்கார்த்திகை அன்று எல்லா இடங்களிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. அன்றைய தினம் விரதமுறை பின்பற்றப்படுகிறது. வழிபாட்டில் பொரி உருண்டை அல்லது கார்த்திகைப் பொரி இடம் பெறுகிறது. அன்றைய தினம் சிவாலயங்களில் சொக்கப்பனை ஏற்றும் வழக்கம் உள்ளது.
 
 



Leave a Comment