16 பேறுகளையும் அளிக்கும்  கந்தசஷ்டி விரதம் 


விரதங்களில் கலியுக வரதனும், கண்கண்ட தெய்வமுமான கந்தனின் விரதமே கந்தசஷ்டி விரதம் ஆகும்.
கந்தனின் சிறப்பான விரத நாட்கள்

சுக்கிர வார விரதம்

கார்த்திகை விரதம்

கந்தசஷ்டி விரதம் 

இதில் கந்தசஷ்டி விரதம் மிகச் சிறந்த விரதமாக கருதப்படுகின்றது.

கந்தசஷ்டி விரதத்தின் மூலம் நாம் விரும்பிய பலன்களை பெறலாம். அதுமட்டுமல்லாமல் குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், கடன் நீங்கவும், வேலைவாய்ப்பு கிடைக்கவும் இவ்விரதத்தை கடைபிடிக்கலாம். முக்கியமாக குழந்தை வரம் இல்லாத பெண்களுக்கு இது சிறந்த விரதமாகும்.

கந்தசஷ்டி விரத பலன்கள் :

கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் எல்லாம் தீர்ந்துவிடும்.

விரதத்தை கடைபிடிக்க, பக்தர்களுக்கு எண்ணிய நலமும், புண்ணிய பலமும் கிடைக்கும்.

கந்தசஷ்டி விரத வழிபாடு செய்து முருகனிடம் வேண்டினால், கேட்டதை பெறலாம்.

கந்தசஷ்டி விரதம் ஐஸ்வர்யத்தை தரக்கூடியது.

கந்தசஷ்டி திதியில் விரதம் இருந்தால் விரும்பிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளையும் அளிக்கும் வல்லமை கந்தசஷ்டி விரதத்திற்கு உண்டு.

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைபிடிப்பது நன்று. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளலாம். கந்தசஷ்டி விரதத்தினை கடைபிடித்தால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய அனைத்தும் நிச்சயம் கைகூடும்.



Leave a Comment