யமதீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்....
யம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கும் வழிகாட்டி உதவிட நமக்கு வாழ்நாள் முழுவதும் நல்ல பலன்களைத் தரும். முன்னோர் ஆசிகள் பெற யம தீபம் ஏற்றுவோம். ஓரு ஆத்மாவை உருவாக்குவதில் ஆத்மகாரகனான சூரியனும் அந்த ஆத்மாவின் ஆயுளை தீர்மானிப்பதில் சூரியனின் புத்திரர்கள் மற்றும்ஆயுள் காரகனான சனீஸ்வர பகவானும், அவருடைய அதிதேவதையான யமனும்தான் என பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது.
பரணி, மகம், சதயம் நட்சத்திரங் களில் பிறந்தவவர்கள் யம தீபம் ஏற்றுவது சிறப்பு. பரணி நட்சத் திரத்திற்கு யமன் அதிபதி. மகம் நட்சத்திரத் திற்கு பித்ருக்களை அதிதேவதையாக கூறியுள்ளனர். ஆன்மீக நூல்களில் சதயத்திற்கு யமனை அதிதேவதையாக கூறப்பட்டுள்ளது. யம தீபம் குறிப்பாக துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. எவரேனும் மரணமடைந்தால் மட்டுமே யம தீபம் ஏற்ற வேண்டும் என்று எண்ணக் கூடாது.
யமனை அதிதேவதையாக கொண்ட சனீஸ்வர பகவான் லக்னத்தில் ஆட்சி உச்சம் பெற்றவர்கள், ஆயுள் ஸ்தானத்தில் சனீஸ்வர பகவான் நீசம் அல்லது பலம் இழந்தவர்கள் யம தீபம் ஏற்றவேண்டும். ஆயுள் ஸ்தானாதிபதி ருத்ரனை அதிதேவதையாக கொண்ட திருவாதிரை அல்லது ருத்ரனை அதிதேவதையாக கொண்டவர்கள் எம தீபம ஏற்றுவது சிறப்பு. அனைத்து சனி பரிகார தலங்களிலும் அனைத்து சிவாலய சனீஸ்வரர் சன்னதிகளிலும் எம தீபம் ஏற்றலாம்.
Leave a Comment