எமதீபம் ஏற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.....
எம தீபம் ஏற்றும் முறை குறித்து நமது சாஸ்திரங்கள் வழி வகைகள் ஏற்படுத்தி உள்ளது. இதோ அந்த வழி முறைகள்:- வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். யம தீபம் தெற்கு திசை நோக்கி எரிய வேண்டும். விளக்கேற்றிய பின் யம தீப சுலோகம் சொல்லி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
விளக்கேற்றிய பின்னர் முன்னோர்களை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். மாதவிலக்கு பெண்கள் இந்த யம தீபம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு பதிலாக வீட்டில் இருக்கும் ஆண்கள் கூட ஏற்றலாம்.
தீபம் ஏற்றி வைத்து பின்னர் ...
ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய
ஸர்வ பூத க்ஷயாயச
ஓளதும்பராய தத்னாய
நீலாய பரமேஷ்டினே!
வ்ருகோதராய சித்ராய
சித்ரகுப்தாய வை நம: சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:
என்ற ஸ்லோகம் சொல்லி வணங்கினால் முன்னோர்கள் மட்டுமின்றி எமதர்மனும் மகிழ்ச்சி அடைவாராம். விபத்துகள், திடீர் மரணம் போன்றவை சம்பவிக்காது. நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.
Leave a Comment