ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த சில மாதங்களாக சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இந்த நிலையில் ஐப்பசி மாதம் பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டுள்ளது.
நாளை 17-ம் தேதி உஷா பூஜை முடிந்தபின், சபரிமலை மேல்சாந்தி மற்றும் மாலிக்காபுரம் கோயில் மேல்சாந்தி ஆகியோர் தேர்வு செய்யும் நடைமுறை தொடங்கும். இதன்படி, பந்தளம் அரண்மனையில் குலுக்குச் சீட்டுப் போடப்படும். இதில் மேல்சாந்தியாக அடுத்து வருவோர் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும்.
10 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள் அந்தச் சீட்டைத் தேர்வு செய்து நிர்வாகத்திடம் வழங்குவர். அதில் சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயரில் உள்ளவர்களே மேல்சாந்தியாக அடுத்த ஓராண்டுக்கு அறிவிக்கப்படுவர்.
வரும 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலமே, முறையான கரோனா பாதுகாப்பு வழிகாட்டல்களுடன்தான் அனுமதிக்கப்படுவார்கள்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக இரு கரோனா தடுப்பூசிகளைச் செலுத்தியிருக்க வேண்டும். ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழும் கொண்டுவர வேண்டும்.
இந்த 5 நாட்களிலும் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், உதயஸ்தமனா பூஜை, கலபா அபிஷேகம், படி பூஜை, புஷ்பா அபிஷேகம் ஆகியவை நடைபெறும். அக்டோபர் 21-ம் தேதி நடை சாத்தப்பட்டு நவம்பர் 2-ம்தேதி சித்திரா விஷேசத்துக்காக மீண்டும் திறக்கப்படும். அதன்பின் 3-ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டு, நவம்பர் 1-5ம் தேதி மண்டலம் மற்றும் மகரவிளக்கு சீசனுக்காகத் திறக்கப்படும்''. என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 15 ஆயிரம் பக்தர்கள் இணையத்தில் முன்பதிவு செய்ததன் அடிப்படையில் அனுமதிக்கப்பட உள்ளனர். ஐயப்பன் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து நாள் தரிசனத்திற்கு பிறகு வரும் 21ம் தேதி நடை சாத்தப்பட உள்ளது. மண்டல மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Comment