ஐந்து எண்ணெயை கலந்து தீபம் ஏற்றுவது சரியா....?
இறைவனுக்கு பூஜையின் போது ஐந்து எண்ணெய். மூன்று எண்ணெய் ஒன்பது கூட்டு எண்ணெய் கூட்டி விளக்கேற்றினால் நல்லது என்று வரும் செய்திகளை நம்பி அப்படியே வீட்டிலோ,ஆலயத்திலோ தொழில் நிறுவனங்களிலோ அலுவலகங்களிலோ தவறு செய்யும் அப்பாவி மக்கள் கவனத்திற்கு.
பஞ்ச தீப எண்ணை; தீப நெய் எனவும் விற்பனை ஆகிறது. இவைகளை கண்டிப்பாக பயன் படுத்த கூடாது. இதனால் எந்த பலனும் கிடையாது. எப்பொழுதுமே ஒரு எண்ணெய்யுடன் இன்னொரு எண்ணெய் சேர்ந்து எரியக்கூடாது
அதர்வன மாந்திரிகத்தில் அசுப நிகழ்வுகளை தன் விரோதிக்கு ஏற்படுத்த தந்திரமாக கையாண்ட முறைதான் கூட்டு எண்ணெய் தீப வழிபாடாகும் . அதே போல் தன் குறைதீரவும். கடுமையான பிரச்சினைகள் விலகவும் பல எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றும் வழக்கமும் இருந்தது, இந்த வழக்கம்தான் இன்று தவறாக கையாளப்படுகிறது,
தீபங்கள் ஏற்றி இறைவனை வழிபடுவது இந்துக்களின் பாரம்பரியமாகும். விளக்கேற்றுவது ஆன்மீகத்தின் வெளிப்பாடு. விளக்கேற்றுவதால் அறியாமை இருள் விலகி,
அறிவு பெருகுகிறது.
வீடு புனிதமடைகிறது.
வளமும் ஆரோக்கியமும் செல்வமும் அதிகரிக்கிறது.
நமது வாழ்வின் பாவங்களை துடைக்கின்றது.
மனதின் தீய எண்ணங்களை எரிக்கின்றது.
விளக்கில் ஊற்றி ஏற்றப்படுவதற்காக பலரும் பல வித எண்ணெய்களை பயன்படுத்துவர். ஆன்மீகத்தில் ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒரு பொருள் மற்றும் பலன் உண்டு. ஒவ்வொரு மனிதனின் தேவைகள் மற்றும் துயரங்களுக்கு ஏற்ப, விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றி ஏற்றி அவர்கள் துயரங்களை களைந்து வீட்டிற்கு அமைதியை கொண்டு வரலாம்.
Leave a Comment